Press "Enter" to skip to content

போலீசாக நடித்து நகை வியாபாரியிடம் ரூ.1.40 கோடி பறித்த 3 போ் கைது…

காதல் என்றவுடன் காதலர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜா மலர்கள் தான். இதற்காகவே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பசுமைக் குடில்கள் அமைத்து, ரோஜா மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். 

இந்த வகை ரோஜாக்களை தாஜ்மஹால் என்று அழைக்கின்றனர். அந்த ரோஜாக்கள் 15 முதல் 30 சென்டி மீட்டர்  நீளம் கொண்டுள்ளது. இந்த ரோஜாக்கள் காதலர் தினத்திற்காக, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி சந்தையில் ஓசூர் மலர்களுக்கொன தனி மவுசு உள்ளது.

மேலும் படிக்க | பூத்துக் குலுங்கும் கார்ஸ் புதர் செடிகள்… புல்வெளி பகுதிகளுக்கு பாதிப்பு…

மூன்று ஆண்டுக்கு முன்பு காதலர் தினத்திற்காக ஒரு கோடிக்கும் அதிகமான ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. பருவம் தவறிய மழை மற்றும் கடும் பனி காரணமாக, மலர்கள் கருகி, உற்பத்தி பெருமளவில் குறைந்துள்ளது. ஒரு செடியில் 30 ரோஜாக்கள் பூக்க வேண்டிய நிலையில், 10 முதல் 15 ரோஜாக்கள் வரை மட்டுமே பூக்கின்றன.

இதனால் இந்த ஆண்டு வெறும் 20 லட்சம் ரோஜா மலர்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டள்ளதாக மலர் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

 இருந்தபோதிலும், மலர்களின் விலை ஏற்றம் கண்டுள்ளதால், விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | பூங்காவிற்கு குவிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள்…

அதுமட்டுமின்றி, தற்போது தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கான, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சுப முகூர்த்தங்கள் மற்றும் கோயில் விழாக்கள் இருப்பதால், உள்ளூர் சந்தைகளிலும் நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 

மேலும், ஓசூரில் கட்டப்படுள்ள  கொய்மலர்களுக்கான சர்வதேச ஏல மையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் மலர் விவசாயிகள், மற்ற நாடுகளைப் போன்று புதுவகையான ரோஜா மலர்களை அறிமுதல் செய்தால் மட்டுமே சர்வதேச மலர் சந்தையில் ஓசூர் ரோஜாக்கள் தனி இடம் பிடிக்க முடியும் என்பதே வாக்கு மொத்த மலர் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. 

மாலை முரசு செய்திகளுக்காக, ஓசூர் செய்தியாளர் கோபால்…

மேலும் படிக்க | அடிப்படை வசதிகள் கூட இல்லை!!!- தஞ்சை பெரிய கோவில் குறித்து எழுந்த புகார்கள்…

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »