Press "Enter" to skip to content

ஐ. ஐ .டி. மரணங்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தாதே காரணம் – குற்றம் சாட்டும் நிரூபன்

திருப்பூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  60 கோடி ரூபாய் செலவில் நமக்கு நாமே திட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் பொதுமக்களின் பங்களிப்போடு நடைபெற்று வருவதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புரோட்டான் சிகிச்சை பிரிவு:

சென்னை தரமணியில் உள்ள அப்பல்லோ புரோட்டன் கேன்சர் சென்டரில் “மருத்துவர் ஏபிஜே அப்துல் கலாம் சிகிச்சை பே” என பெயரிடப்பட்டுள்ள புரோட்டான் சிகிச்சைக்கான  பெரிய பிரிவு தொடக்க விழாவில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு ஏபிஜே அப்துல் கலாம் சிகிச்சை பே-ஐ தொடங்கி வைத்தார்.

பங்கேற்றோர்:

மேலும் இந்நிகழ்வில்  ஏபிஜே அப்துல்கலாம் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷனின் இணை நிறுவனர்  ஏபிஜேஎம்ஜே ஷேக் சலீம் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் -ன் குரூப் இயக்குனர்  ஹர்ஷத் ரெட்டி, ARCC ன் தலைமை செயலாக்க அதிகாரி ஹரீஷ் திரிவேதி மற்றும் APCC ன் மருத்துவ இயக்குனர் புற்றுநோய்க்கான கதிரியக்க நுறையின் தலைவர் மருத்துவர். ராகேஷ் ஜலாலி ஆகியோர் கலந்து கொண்டனர். 

சிறப்பு நிகழ்ச்சி:

அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோயை குணப்படுத்தும் வகையில் இன்றைக்கு முயற்சி எடுத்ததற்கான ஆயத்த பணிகளில் இறங்கி வெற்றியும் பெற்று புற்றுநோய்க்கென புதிய இயந்திரங்களை துவக்கி வைக்கும் வண்ணம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறினார்.

முதலமைச்சர் தமிழ்நாட்டில் பொறுப்பேற்றதிலிருந்து மக்களை நோய் நொடிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும் என மருத்துவத்துறையில் பல்வேறு புரட்சிகரமான திட்டத்தை  கொண்டு வந்திருக்கிறார் எனக் கூறியுள்ளார்.

கொரோனா மீட்பு பணிகள்:

நோய் தாக்கம் மக்களுடைய எதிர்காலத்தையும் உடல் நலத்தையும் பாதிக்கிறது எனவும் கொரோனா பேரிடர் காலத்தில் கூட மக்களை மீட்டெடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது எனவும் மருத்துவத்துறையில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

நலப்பணி திட்டங்கள்:

மருத்துவத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது எனவும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம்  என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார் அமைச்சர் சாமிநாதன்.  

வீடு தேடி… 

:

மக்களை தேடி மருத்துவம் என்கிற திட்டம் வீட்டிற்கு மருத்துவத்தை கொண்டு போய் சேர்த்த திட்டமாகவும் இதேபோல இன்னுயிர் காப்போம் திட்டமான 48 மணி நேரத்திற்குள் விபத்து ஏற்பட்டவரின் சிகிச்சை செலவை அரசை ஏற்றுக் கொள்ளக்கூடிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

கிராமங்களில் உதவூர்தி:

என்னுடைய தொகுதி கிராமப்புறம் நிறைந்த தொகுதி எனவும் அங்கு உதவூர்தி சேவை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் எதுவும் இல்லாமல் இருந்தது எஅன்வும் கூறிய அமைச்சர் சாமிநாதன் ஆனால் தற்போது பல்வேறு கருவிகளை உள்ளடக்கிய உதவூர்தி தயார் செய்து ஒவ்வொரு பகுதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு இருக்கும் மக்களுக்கு பயன்படும் வகையில் அமைந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாம் நினைவாக:

அப்துல் கலாம் நினைவாக இந்தத் திட்டத்தை துவங்கி இருப்பது பாராட்டுக்குரியது எனவும் தமிழக அரசின் சார்பில் முதல்வரின் உத்தரவின் பேரில் செய்தி தொடர்பு துறை  சார்பாக விரைவில் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் திருவுருவச் சிலை அமைக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அப்துல்கலாம் சாதனை போல இந்த திட்டம் மக்களுக்கு பயன்பட்டு புற்றுநோய் இல்லாத தமிழகமாக உருவாக்கக் கூடியதாகவும் தென்னிந்தியாவில் சிறப்பு மருத்துவமனையாக செயல்பட வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:    சைதாப்பேட்டையில் நடைபெற்ற 10 அம்ச பெருந்துறை முறையீடு….

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »