Press "Enter" to skip to content

இந்தியாவில் பாதிக்கப்பட்ட இறக்குமதியும் ஏற்றுமதியும்…. வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள்!!!

பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா நாகலாந்தின் திமாபூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும் பாஜவின் மாநிலத் தலைவர் டெம்ஜென் இம்னா அலோங்கிற்கு உற்சாக வரவேற்பு அளித்தார்

எதற்காக?:

பிப்ரவரி 27 அன்று நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்காக நாகாலாந்து வந்தடைந்தார் பாஜக் கட்சி தலைவர் ஜே.பி. நட்டா.

கிழக்கு நோக்கிய கொள்கை:

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தனது ‘கிழக்கு நோக்கிய கொள்கை’  மூலம் வடகிழக்கு மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. எனவும்  பிரதமர் மோடியே இப்பகுதிக்கு 50க்கும் மேற்பட்ட முறை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வடகிழக்கு பகுதியில் பாஜகவானது அதன் முழு அர்ப்பணிப்பையும் செலுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார் ஜே.பி.நட்டா.

தேர்தல் அறிக்கை:

நாகாலாந்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது.  இந்த தேர்தல் அறிக்கைக்கு கட்சியால் ‘சங்கல்ப் பத்ரா’ என பெயரிடப்பட்டுள்ளது.  பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா அதை இன்று வெளியிட்டுள்ளார். 

தேர்தல் அறிக்கை குறித்து:

 

”பாஜகவின் இந்த சங்கல்ப் பத்ரா, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான வலுவான வரைபடத்தை உள்ளடக்கியது மற்றும் நாகாலாந்தில் தொடர்ந்து முன்னேற்றம், செழிப்பு மற்றும் அமைதியை அடைவதற்கான வழிமுறைகளை கோடிட்டுக் காட்டுகிறது.” எனக் கூறியுள்ளார் நட்டா.

வளர்ச்சி பாதையில்:

இந்நிகழ்வின் போது எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்தார் பாஜக தலைவர் ஜேபி நட்டா.  தொடர்ந்து அவர் பேசுகையில், “5 ஆண்டுகளுக்கு முன்பு வடகிழக்கு மாநிலம் முற்றுகை, கிளர்ச்சி, தீவிரவாத தாக்குதல் போன்றவற்றை எதிர்கொண்டது.  ஆனால் இன்று நாகாலாந்து மீண்டும் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சியின் பாதையில் உள்ளது” என்று கூறியுள்ளார். 

அகற்றப்பட்ட கிளர்ச்சி அமைப்பு:

பாஜக தலைவர் தொடர்ந்து கூறுகையில், “நாகாலாந்து வளர்ச்சிக்கான கதைகளை கொண்டுள்ளது.  கடந்த 8 ஆண்டுகளில் கிளர்ச்சி 80% குறைந்துள்ளதுடன் 66% பகுதிகளில் இருந்து AFSPA அகற்றப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், “பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களை ‘எட்டு லட்சுமி’களாகக் கருதுகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் வடகிழக்கு வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.  நாங்கள் நெடுஞ்சாலைகளின் வலையமைப்பை சிறப்பாக அமைத்துள்ளோம்” எனவும் கூறியுள்ளார்.

வாகனம் வழங்கப்படுகிறதா?:

நாகலாந்தின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு இலவச வாகனங்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதை நாடு முழுவதும் செயல்படுத்தும் திட்டமும் பாஜகவிற்கு உள்ளதாக அரச்இயல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதை உண்மையா என்ற தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

அடுத்த பயணம்:

பாஜகவின் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்காக ஜேபி நட்டா நாளை மேகாலயாவுக்கு பயணிக்கவுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ரூ.12 கோடி இழப்பிற்கிடையில்….. ரூ. 820 கோடி வருவாயை பதிவு செய்த அதானி குழுமம்…..

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »