Press "Enter" to skip to content

ஈரோடு (கி) இடைத்தேர்தலில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கியது…!

திருமண பரிசு : 

கல்யாணம் என்பது ஆயிரமாண்டு கால பயிர், வாழையடி வாழையாக நடக்ககூடிய விழா தான் திருமணம். இந்த திருமணமானது உறவுகளுக்கு தெரிந்தவர்களுக்கும் ஊருக்கும் நண்பர்களுக்கு சொல்லி சிறப்பா நடைபெறும். அப்படி நடைபெறும் திருமணங்களில் இந்த பரிசு பொருள் என்பது மேலும் சிறப்பாகவே அமையும். இப்போ அந்த பரிசு என்னவாக இருக்கும் இது அதுவான்னு மணமேடையில் நிற்கும் போது பல சிந்தனைகள் பரந்து விரிந்து படரும். அப்படி தன்னுடைய சித்தப்பாவின் திருமணத்திற்காக பரிசாக கொடுக்க தங்களின் 7 தலைமுறை புகைப்படங்களை சேகரித்து பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார் அன்பு மகள் 

மேட்டுப்பாளையத் தில் சித்தப்பாவின் திருமணத்திற்கு பரிசாக தங்களது 300ஆண்டுகளுக்கு முன்பு இருந்து ஏழு தலைமுறை உறவுகளின் புகைப்படங்களை போட்டோ சாட் போட்டு கொடுத்து அசத்திய ஏழாம் வகுப்பு மாணவியின் முயற்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

முயற்சி திருவினையாக்கும் 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஒன்னிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஏழாம் வகுப்பு சிறுமி  சங்கமித்ரா. இவர் கொரானோ காலத்தில் தனக்கு கிடைத்த நேர வாய்ப்பினை பயன்படுத்தி தன்னுடைய முன்னோர்கள் யார் அவர்கள் எங்கு எல்லாம் வாழ்ந்தார்கள் அவர்களின் உறவுமுறை பற்றி தெரிந்துகொள்ளவும் முயன்றுள்ளார்

தனது பெற்றோர்கள் மற்றும் தாத்தா விஜியகுமார் அவர்களின் உதவியுடன் தனது தேடலை தொடங்கிய மாணவி தற்போது வரை ஏழு தலைமுறை உறவுகளின் பெயர் அவர்களது புகைப்படம் மற்றும் அவர்கள் தனக்கு என்ன உறவு என்று சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தனது முன்னோர்கள் வரை கண்டுபிடித்து அதனை போட்டோ சாட்டாக உருவாக்கியுள்ளார்.

 

மேலும் படிக்க | ஊடகங்களில் வெளியாகும் குறை தொடர்பான செய்திகளுக்கு முன்னுரிமை….. முதலமைச்சர் உத்தரவு

மேலும் திப்பு சுல்தான் ஆளுமைக்கு கீழ் கொங்கு மண்டலம் வந்த போது திண்டுக்கல் மாவட்டம் தங்கச்சியாம்பட்டிபகுதியில் தனது சொந்தங்கள் உடன் வாழ்ந்து வந்த சீரங்ககவுன்டர் மைசூர் போரின் போது பஞ்சம் பிழைக்க  அங்கு இருந்து  கோவை மாவட்டம் முடுக்கன்துறை பகுதிக்கு  உறவுகளுடன் இடம் பெயர்ந்து வந்த முதல் தலைமுறை தாத்தா என்பது  வரை மாணவி கண்டுபிடித்து தனது ஆந்தை குலத்தின் அடையாளத்தை கண்டுபிடித்துள்ளார்

மேலும் அவருக்கு அடுத்தப்படியாக வந்த அவரின் வழி உறவுகள் என சுமார் ஏழு தலைமுறை உறவுகளை கண்டறிந்துள்ளார்.இன்றைய அவசர வாழ்க்கையில் தனது அப்பா மற்றும் தாத்தா பெயரை தாண்டி இன்று வாழும் உறவுகளை பற்றியும் அவர்களது பெயர் உறவுமுறை குறித்து யாருக்கும் தெரியவில்லை அதுமட்டுமின்றி அன்றைய கலாச்சார முறை, விருந்தோம்பல்,பண்பாடு போன்றவையும் அடுத்தடுத்து தலைமுறைகள் அறிவதில்லை

 நான் யார் எனது உறவினர்கள் யார்

இந்நிலையில்  நான் யார் எனது உறவினர்கள் யார் முன்னோர்கள் யார் என்ற தேடலை தொடங்கிய மாணவி இன்று தான் கண்டுபிடித்த 300 ஆண்டுகளின் உறவு முறைகளையும் புகைப்படங்களையும்  தரவுகளையும் தனது சித்தப்பாவான கெளதம் கெளசல்யா திருமணத்தில் அவருக்கு திருமண பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்

ஆச்சரியத்தில் உறவினர்கள் 

திருமணத்தில் ஆயிரம் பேர் வந்து வாழ்த்தினாலும் அதை அன்றே கடந்து செல்லும் அவசர வாழ்க்கையில் ஒவ்வொரு சொந்தமும் நமது முன்னோர்களின் அடையாளமாகவும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் நாம் நெருக்கமுடன் பழகுவதால் தலைமுறைகளை கடந்தும் உறவுகளும் அவர்களது அரவணைப்பும் தொடரும் அதுமட்டுமின்றி கொங்கு மண்ணின் கலாச்சாரம் அன்பு இந்த திருமணத்தின் மூலம் அங்கு கூடிய அணைவருக்கும் வெளிப்படுத்தவும்  தம்பதியினருக்கும் தெரியபடுத்தும் வகையில் இந்த பரிசு அமைந்திருந்தது

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »