Press "Enter" to skip to content

உலக வங்கியிடம் 190 மில்லியன் டாலர் கடன் : தமிழ்நாடு அரசு அனுமதி : காரணம் இதோ….

தங்கம் கடத்தல் 

சென்னை  பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த மலேசியாவை சேர்ந்த பெண்ணை  சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். 

சரியான பதில் அளிக்காததால் சிக்கிய நபர்கள்

அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள்  சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை வளைமாக  மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டனர். இவரிடம் இருந்து ரூ. 60 லட்சத்தி 43 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 178 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். 

 

கால் மூட்டு வலி துணியில் தங்கம் 

அதுப்போல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் சூட்கேசை சோதனை செய்தனர். அதில் கால் மூட்டு வலிக்காக பயன்படுத்த கூடிய துணியில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 81 லட்சத்தி 31 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 585 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். துபாயில் இருந்து கொழும்பு வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபர் சில பயணிகளிடம் இருந்து சிறிய பொட்டலம்களை வாங்கிய போது மடக்கி பிடித்தனர்.

மேலும் படிக்க | சித்தாப்பாவின் கல்யாணத்துக்கு 7 தலைமுறை உறவுகளின் போட்டோக்களை சாட் போட்டு பரிசளித்த மகள்! ஆச்சரியத்தில் உறவுகள்

பொட்டலத்தில் மாட்டிய வலிபர் 

 அப்போது துபாயில் இருந்து கொழும்பு வந்ததாகவும் கொழும்பில் இருந்து சென்னை வந்த பயணிகளிடம் சிறிய பொட்டலம்களை தந்து சென்னையில்  வாங்கி கொள்வதாக கூறினார். அந்த பொட்டலம்களில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். ரூ. 98 லட்சத்தி 3 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 911 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். 

ஒரே நாளில் மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் வந்த 3 பேரிடம் இருந்து ரூ. 2 கோடியே 39 லட்சத்தி 77 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 674கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மலேசிய பெண் உள்பட 3 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தலில் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என  விசாரித்து வருகின்றனர்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »