Press "Enter" to skip to content

அரசு வேலைக்காக காத்திருப்பவர்களா நீங்கள்… இந்த தகவல் உங்களுக்கு தான்!!!

எஸ்எஸ்சி எம்டிஎஸ் பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு பிப்ரவரி 17, 2023 வெள்ளிக்கிழமையுடன் முடிவடையவுள்ளது.

எஸ்எஸ்சி எம்டிஎஸ் 2022 : 

ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷனின் முக்கிய தேர்வுகளில் ஒன்றான எஸ்எஸ்சி எம்டிஎஸ் பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு பிப்ரவரி 17, 2023 வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.  எஸ்எஸ்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் 2022ற்கான காலியிடங்களுக்கான பதிவு செயல்முறை பிப்ரவரி 17 ஆம் தேதி முடிவடைகிறது.  

எஸ்எஸ்சி எம்டிஎஸ் 2022 ஆட்சேர்ப்புக்கு இதுவரை விண்ணப்பிக்காத மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள், எஸ்எஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.

nic.in இல் விண்ணப்பிக்கலாம். 

எஸ்எஸ்சி எம்டிஎஸ் 2022 முக்கிய விவரங்கள்:

எஸ்எஸ்சி எம்டிஎஸ் 2022ல் 12523 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.  SSC MTS 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 17, 2023 மற்றும் கணினிமய கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 19 ஆகும்.  விண்ணப்பங்களில் தவறுகளை சரிசெய்ய பிப்ரவரி 23 அன்று முதல் பிப்ரவரி 24, 2023 அன்று வரை இணையதளம் திறந்திருக்கும்.  கணினி அடிப்படையிலான தேர்வு ஏப்ரல் 2023 அன்று நடைபெறும்.
 
விண்ணப்பிப்பது எவ்வாறு?:

கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றுவதன் மூலம் விண்ணப்பதாரர்கள் எஸ்எஸ்சி எம்டிஎஸ் 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்:

  • பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.

    nic.in இல் சென்று பதிவு செய்ய வேண்டும்.

  • எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்விற்கான இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

  • கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பதிவிட்டு தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.

  • ssc.

    nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்ப செயல்முறையை முடிக்கலாம்.

  • விண்ணப்பக் கட்டணம் வரைமுறைக்குட்பட்டது.

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து எதிர்கால தேவைக்காக சேமிக்கலாம்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   குறைந்த வருமானம்…. பதவி விலகிய சூசன்… சவாலுக்கு மத்தியில் பதவியேற்ற மோகன்…  

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »