Press "Enter" to skip to content

உணவு தட்டுடன் போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்…!

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டம் இந்த வனப்பகுதியில் தேக்கு உள்ளிட்ட அரிய வகை மரங்கள், அரிய வகை மூலிகை தாவரங்கள் இந்த வனப்பகுதியில் அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கம் முதலே வரலாறு காணாத கடும் உறைப்பனி பொழிவு காணப்பட்டது.  இதனால் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் செடி, கொடிகள் அனைத்தும் கருகின.  தற்போது முதுமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வனப்பகுதி முழுவதிலும் கடும் வறட்சி நிலவுகிறது.  இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயநிலை இருந்தது.

இந்நிலையில் நாடுகாணி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இன்று திடீர் காட்டுத் தீ ஏற்பட்டது. சுமார் ஐந்து ஏக்கர் வனப்பகுதிகள் காட்டு தீயிக்கு இரையாகியுள்ளது. 

சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு வனச்சரகர் சஞ்சீவ் தலைமையில் வன பாதுகாவலர் அருண்குமார் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் தற்போது வனப்பகுதிகளில் வறட்சி நிலவி வருவதால் காட்டு தீ ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வனத்துறையின வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க:  அரசு வேலைக்காக காத்திருப்பவர்களா நீங்கள்… இந்த தகவல் உங்களுக்கு தான்!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »