Press "Enter" to skip to content

”மீண்டும் ஒருமுறை உதவினால்….” சீனாவை எச்சரித்த அமெரிக்கா!!!

டமாஸ்கஸில் நள்ளிரவு 12:30 மணியளவில் பலத்த வெடிச் சத்தம் கேட்டது.  இந்த தாக்குதலில் பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்தன.  இறந்தவர்களில் ராணுவ வீரர்களும் அடங்குவர்.

வான்வழி தாக்குதல்:

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் ராணுவம் இரவு வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.  இந்த தாக்குதலில் பொதுமக்கள் உட்பட குறைந்தது 15 பேராவது கொல்லப்பட்டிருக்கலாம் என சிரிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ராணுவ வீரர்களும்:

டமாஸ்கஸில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.30 மணியளவில் பலத்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து  பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.  இந்த தாக்குதலில் 15 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  உயிரிழந்தவர்களுள் ராணுவ வீரர்களும் அடங்குவர்.  

போராளி குழுக்கள்:

டமாஸ்கஸின் கிராமப்புறத்தில் ஈரானிய போராளிகள் மற்றும் லெபனான் போராளிகள் குழுவான ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய  குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பெண் உட்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

 

தொடரும் தாக்குதல்:

வான்வழித் தாக்குதல் குறித்து இஸ்ரேலிடம் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. டமாஸ்கஸைச் சுற்றியுள்ள பகுதிகளை இஸ்ரேல் அடிக்கடி குறிவைத்து தாக்கி வருகிறது. பிப்ரவரி 6 ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  துரோகத்தால் வீழ்ந்த சிவசேனா…. மீட்டெடுப்பாரா உத்தவ் தாக்கரே!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »