Press "Enter" to skip to content

இருவரை பிணை கைதிகளாக பிடித்து வைத்த பணம் கேட்ட கும்பல்…

திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளையர்கள் 2 பேரை, மார்ச் மூன்றாம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கவியரசன் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்களில் கொள்ளை நடைபெற்றது. ஏ.டி.எம். மையங்களில் இருந்த பணம் எடுக்கும் எந்திரங்களை கேஸ் வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த 72 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பணத்தை வட மாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்துக் கொள்ளையர்களை பிடிப்பதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

கர்நாடகா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தேடுதல் வேட்டை ஈடுபட்டிருந்த காவல் துறையினர், கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப் மற்றும் ஆசாத் என்ற இரண்டு பேரை ஹரியானாவில் கைது செய்தனர். 

இதையும் படிக்க : குடிசை இல்லாதப் பகுதிகளை உருவாக்குவதே எங்களின் குறிக்கோள் – முதலமைச்சர் பேச்சு!

கைது செய்யப்பட்ட இருவரையும் தமிழ்நாடு தனிப்படை காவல் துறையினர் ஹரியானா மாநிலத்தில் இருந்து விமான மூலம் தற்போது சென்னை விமான நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் பலத்த காவல் துறை பாதுகாப்போடு திருவண்ணாமலைக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில், ஹரியானாவில் கைது செய்யப்பட்ட ஏ.டி.எம். கொள்ளையர்கள் இருவரையும் விசாரணைக்கு பின் திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கவியரசன் முன் ஆஜர்படுத்தினர். அப்போது, கொள்ளையர்கள் 2 பேரையும் மார்ச் 3-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி கவியரசன் உத்தரவிட்டார்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »