Press "Enter" to skip to content

தமிழ்நாடு முழுவதும் அம்மன் கோயில்களில் நிகழ்ந்த மயான கொள்ளை திருவிழா…!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி பார்வை செய்தனர். 

திண்டிவனம் அடுத்த தென்பசார் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு நாகாத்தம்மன் ஆலயத்தில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி பார்வை செய்தனர்.

இதேப்போன்று, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் பழைய பஜார் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் மயான கொள்ளை பிரம்மோற்சவம் நடைபெற்றது.  பக்தர்கள் உடலில் அலகு குத்திக்கொண்டு சிங்க வாகனத்தில் எழுந்தருளிய அம்மனை தரிசித்தனர்.

இதேப்போல், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காமராஜ் நகர் மார்க்கெட் சந்தை திடலில் அமைந்திருக்கும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் 71 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி மயான கொள்ளை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இதையும் படிக்க : முதலமைச்சரின் அடுத்த சுற்றுப்பயணம் இங்க தான்…2 நாள் பயணத்தின் முக்கிய அறிவிப்பு!

இதனைதொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டு பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மயான கொள்ளை நடைபெற்றது. அப்போது  பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும்,  கைகளில் சூலாயுதம், வேல், கத்தி வைத்துக்கொண்டு நடனமாடியும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

அதேப்போன்று, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள முடிதிருச்சம்பள்ளி கிராமத்தில் இருக்கும் புகழ் பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திலும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், மாவிளக்கிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »