Press "Enter" to skip to content

கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சருக்கு காவல்துறையினர் பேரணி மரியாதை…!

தமிழ் பொதுமக்களிடம் விழிப்புணர்வு 

தமிழ் மொழி பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் பரப்புரை பயணம். “தமிழைத் தேடி” என தமிழன்னை சிலையுடன் சென்னையிலிருந்து மதுரை வரை 8 நாட்கள் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை வள்ளுவர்கோட்டத்தில் தொடங்கினார்.

“தமிழை தேடி” விழிப்புணர்வு பரப்புரை

உலக தாய் மொழி தினத்தை ஒட்டி பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையிலிருந்து மதுரை வரை 8 நாட்கள் நடைபெறும் “தமிழை தேடி” விழிப்புணர்வு பரப்புரை பயண தொடக்க நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

மேலும் படிக்க | மக்கள் நீதி மய்யம் – 6-ம் ஆண்டு துவக்க விழா – மரக்கன்றுகள் அன்பளிப்பு

இதில் கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் ராமதாஸ், பாமக கௌரவ தலைவர் கோ.க.மணி, வி ஜி சந்தோசம் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

சென்னையில் தொடங்கிய பயணம் திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல் வழியாக பயணித்து  28ஆம் தேதி   பயணத்தை மதுரையில் நிறைவு பெறுகிறது.ராமதாசுடன் பாமகவினர் பலர் இந்த தமிழைத் தேடி விழிப்புணர்வு பிரச்சார பயணத்தில் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக  தமிழன்னை படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் 8 நாட்கள் பரப்புரை பயணத்திற்காக வடிக்கப்பட்ட தமிழன்னை சிலையினை ராமதாஸ் திறந்து வைத்தார்.

 

பாமக நிறுவனர் ராமதாஸ் மேடை பேச்சு 

எங்கே போய் தேடுவது தமிழை தமிழை பார்த்தீர்களா? தமிழை நாங்கள் தொலைத்து விட்டோமே  எங்காவது யாராவது பார்த்தீர்களா என்று கேட்டால் எவரும் இல்லை என்றே சொல்கிறார்கள்…அதனால் தான் இந்த தேடலை தொடங்கி மதுரை வரை செல்கிறேன்.கன்னியாகுமரி வரை கூட செல்லவேண்டும் தமிழ்நாடு முழுவதும் சென்று தமிழை தேட வேண்டும் என்றார். 

மேலும் படிக்க | உலக தாய் மொழி நாளும் அரசியல் ஆளுமைகளின் ட்வீட்டர் பதிவுகளும் !!!!

தமிழை தேடி நான் செல்கிறேன் என்று சொல்வதை விட நாம் அனைவரும் செல்கிறோம், தமிழ் கூறும் நல் உலகில் வாழ்கின்ற தமிழ் என்றும் நிலைத்து நிற்கும் என்று நம்புகின்ற அனைவரும் அனைத்து உள்ளங்களும் மதுரை வரை என்னுடன் வர இருக்கிறது. அந்த அனைவருக்கும் என் நன்றிகள் என கூறினார். 

தலையை அடகு வைத்தாவது 5 கோடி பரிசு

இன்று உலக தாய் மொழி நாள்…இன்று தமிழ் இங்கே இருக்கிறது? என கேள்வி எழுப்பியவர் தமிழை இந்த கல்லூரியில்,பள்ளி கூடத்தில் ,நீதி மன்றத்தில் பார்த்தேன் என்று யாராவது சொன்னால் அவர்களுக்கு 5 கோடி பரிசு அளிக்கிறேன் என் தலையை அடகு வைத்தாவது நன் பரிசை வழங்குகிறேன் என கூறினார்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »