Press "Enter" to skip to content

கோயில் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபர்… சிசிடியாவால் கைது!!!

அயனாவரம் பகுதியில் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில் கீழ் மகன் (ரவுடி)யை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.  பிடிக்கச் சென்ற காவலர்களை கத்தியால் வெட்டி தப்ப முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.  அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று உதவி ஆய்வாளர் சங்கரை இரும்புக் கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.  இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் காவல் துறையினர் கொலை முயற்சி உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிப்பதற்காக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு தொலைக்காட்சி ஒளிக்கருவி (கேமரா)க்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உதவி ஆய்வாளர் சங்கர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருக்கும் பொழுது அங்கு இருசக்கர வாகனத்தை கௌதம் என்பவர் இயக்கி வந்ததும் அவர் பின்னால் இருசக்கர வாகனத்தில் சூர்யா மற்றும் அஜித் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து காவல் உதவி ஆய்வாளர் சங்கரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அயனாவரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் மீனா தலைமையில் காவலர் அமானுதீன், காவலர்கள் சரவணன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கௌதம் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் நேற்று காலை கைது செய்துள்ளனர்.  இந்த நிலையில் உதவி ஆய்வாளர் சங்கரை தாக்கிய சூர்யாவை பிடிப்பதற்காக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அப்போது சூர்யா திருவள்ளூர் மாவட்டத்தில் அவரது அக்கா புஷ்பா என்பவரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அயனாவரம் பெண் உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான 4 பேர் கொண்ட தனி படை காவல் துறையினர் திருவள்ளுவர் மாவட்டம் விரைந்து  சூர்யாவை கைது செய்து சென்னை அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது அயனாவரம் நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே வரும்பொழுது  சூர்யா தனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கேட்க இதற்காக வாகனத்தை ஓரமாக நிறுத்திய பொழுது அங்கிருந்து சூர்யா தப்பி ஓடி உள்ளார். அப்பொழுது தலைமை காவலர் அமுனுதீன் மற்றும் காவலர்கள் சரவணன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் சூர்யாவை பிடிப்பதற்காக துரத்தி சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அங்கு இருந்த ஒரு கரும்பு ஜூஸ் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து காவலர்களை தாக்கி அங்கிருந்து தப்பிச் செல்ல  அப்பொழுது இந்த தாக்குதலில் அயனாவரம் தலைமை காவலர் அமானுதீன் மற்றும் தலைமைச் செயலக காலனி காவல் நிலைய காவலர் சரவணன் ஆகியோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சூர்யாவை பிடிப்பதற்காகவும் காவலர்களை பாதுகாக்கவும் உதவி ஆய்வாளர் மீனா தான் வைத்திருந்த துப்பாக்கியால் சூர்யாவின் முழங்கால்  பகுதியில் சுட்டு அவரை பிடித்துள்ளனர். 

 

பிடிபட்ட சூர்யா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அதுமட்டுமின்றி இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு காவலர்களும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற நியூ ஆவடி சாலை ஆர்டிஓ அலுவலகம் எதிரே உள்ள கரும்பு ஜூஸ் கடை அருகில் காவல் துறையின் தடையவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துச் சென்றுள்ளனர். 

மேலும் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சூர்யா மீது புளியந்தோப்பு காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கைபேசி மற்றும் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் உட்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.  மேலும் இதில் பெரும்பாலான வழக்குகள் போலீசாரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி பதிவு செய்யப்பட்டது எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:    நெல் கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர்….!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »