Press "Enter" to skip to content

சிதம்பரத்தில் தமிழ்நாடு ஆளுநர்…. கருப்புக்கொடி போராட்டம்!!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி பார்வை செய்துள்ளார்.  

சிதம்பரம் பயணம்:

இரண்டு நாள் பயணமாக நேற்று சிதம்பரம் வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று இரவு சிதம்பரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி அறக்கட்டளை விழாவில் பங்கேற்ற பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்துள்ளார்.

சாமி பார்வை:

இன்று காலை அங்கிருந்து புறப்பட்ட அவர், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தனது மனைவியுடன் சென்ற அவரை கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் மேள, தாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை அளித்து மாலை அணிவித்து வரவேற்பு அளித்துள்ளனர்.  பின்னர் கோயிலுக்குள் சென்ற அவர், சட்டையை கழற்றி விட்டு கோயிலின் கனகசபை மீது ஏறி நடராஜரை பார்வை செய்துள்ளார்.

பின்னர் கீழே வந்த அவருக்கு கோயில் தீட்சிதர்கள் பிரசாதம் வழங்கியதையடுத்து கோயிலை விட்டு வெளியே வந்த அவர், மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

நந்தனார் மடம்:

இதைத்தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் ஆளுநர் ஆர்.என்.

ரவி, சிதம்பரம் நகரில் ஓமக்குளம் என்ற இடத்தில் உள்ள நந்தனார் மடத்திற்கு செல்லவுள்ளார். அங்கு மடத்தை பார்வையிட்டு விட்டு, அங்குள்ள சுவாமி  சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவிக்கவுள்ளார்.

கருப்புக்கொடி:

மார்க்சியம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.  இதனால் சிதம்பரத்தில் இன்று ஆளுநர் வருகையின்போது கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.  இதனால் விழுப்புரம் சரக காவல் துறை டிஐஜி பாண்டியன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கடலூர் ராஜாராம், கள்ளக்குறிச்சி மோகன்ராஜ் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க:   அரசு பள்ளிகளியில் சேர்க்க தொடக்க வயது என்ன?!…. உத்தரவிட்ட கல்வி அமைச்சகம்!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »