Press "Enter" to skip to content

மகாராஷ்டிராவில் தொடரும் மோதல்…. சஞ்சய் ராவத் மீது வழக்குப்பதிவு!!!

செகந்திராபாத் | நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் மறுமலர்ச்சிக்கு தொடர்வண்டித் துறை அமைச்சகம் அளித்த முக்கியத்துவத்திற்கு ஏற்ப, மௌலா அலியில் உள்ள மண்டல தொடர்வண்டித் துறை பயிற்சி நிறுவனத்தில் (ZRTI) அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான படிக்கட்டு கிணறு, தென் மத்திய தொடர்வண்டித் துறையால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றை சீரமைக்கும் பணி ரூ.6 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த கிணற்றில் இருந்து தினமும் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. 

மேலும் படிக்க | சுகேஷ் சிறையில் இருந்து ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான ஆடம்பர பொருட்கள் பறிமுதல்…

இந்த கிணறு சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் நிஜாமின் பிரதமராக இருந்த சர் மிர் துராப் அலி கான், சலார் ஜங் I, மாம்பழ தோட்டங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய பயன்படுத்தப்பட்டது என தென் மத்திய தொடர்வண்டித் துறை (SCR) தெரிவிக்கிறது. தோட்டத்திற்கு நீர்ப்பாசனம் செய்யும் பொறுப்பை வழங்கிய ஊழியர்களுக்கு கிணற்றுடன் பத்து அறைகளும் கட்டப்பட்டன.

1966 ஆம் ஆண்டில், SCR கிணற்றை மரபுரிமையாகப் பெற்றது. கடந்த ஐந்து தசாப்தங்களாக, இது பயிற்சி நிறுவனத்தின் நீர் தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக தொடர்வண்டித் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | அரசு பள்ளிகளியில் சேர்க்க தொடக்க வயது என்ன?!…. உத்தரவிட்ட கல்வி அமைச்சகம்!!

SCR இன் பொது மேலாளர் அருண் குமார் ஜெயின், இது குறித்து கூறுகையில், “ZRTI, மேற்பார்வையாளர்கள் பயிற்சி மையம் மற்றும் பிராந்திய முகாம் அலுவலகம் போன்ற சுற்றியுள்ள அலுவலகங்களின் அனைத்து நீர் தேவைகளுக்கும் போதுமான அளவு இந்த புத்துயிர் பெற்ற பாரம்பரியக் கிணறு சேவை செய்யும்” என்றால். இதன் மூலம் மாதம் 5 லட்சம் ரூபாய் மிச்சமாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிணறு இப்போது தண்ணீரை சுத்தமாக வைத்திருக்கவும், இலைகள் மற்றும் பிற பொருட்கள் அதில் விழுவதைத் தடுக்கவும் நைலான் மெஷ் மூலம் மூடப்பட்டுள்ளது. மாசுபடாத தண்ணீரை வழங்க கைமுறையாக குளோரினேஷன் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

— பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | தாய்மொழியை அதிகம் பயன்படுத்த உறுதிமொழி ஏற்போம் – அமித்ஷா வேண்டுகோள்!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »