Press "Enter" to skip to content

விடுப்புக்காக அடித்துக் கொண்ட பெண் காவலர்கள்…. பணியிடைநீக்கம் செய்த நிர்வாகம்!!!

வேளாண்மைத் துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு டிரோன்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை அடுத்த அடியமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற இந்த திட்டம் குறித்த அறிமுக நிகழ்ச்சியில் டிரோன்கள் மூலம் மருந்து தெளித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. இதில் பாரதிய கிசான் சங்கத்தினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். 

காவிரி டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் சம்பா,  குருவை பயிர்களும் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் உளுந்து பயிரும் சாகுபடி செய்யப்படுகின்றன. 

மேலும் படிக்க | காதலியை கொன்ற காதலனுக்கு 5 நாட்கள் நீதிமன்ற காவல்… 

நகர்மயமாதலின் விளைவாக விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், நடவு இயந்திரம் உழவு இயந்திரம், களை எடுக்கும் இயந்திரம், அறுவடை இயந்திரம் என்று இயந்திரங்கள்  மூலமாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. 

இருப்பினும் திரவ வடிவ மருந்துகள் தெளிப்பதற்கு விவசாயிகள் கைத்தெளிப்பான்கள் மூலம் வயலில் நடந்து சென்று விவசாயப் பணியை மேற்கொண்டு வந்தனர். இதற்கு காலம் நேரம் அதிகமாக செலவாகுதுடன் ஆள் பற்றாக்குறை காரணமாக குறிப்பிட்ட காலத்தில் மருந்து அடிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது இதற்கு ஒரு தீர்வாக ட்ரோன்கள் மூலம் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | சட்டம் ஒழுங்கை கண்காணிக்க புது தொழில்நுட்பங்கள்….. 

நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கான ட்ரோன்களுக்கு 50% மானியம் வழங்குகிறது. இதனை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தும் வகையில் மயிலாடுதுறையை அடுத்த அடியமங்கலம் பகுதியில் விவசாயி ஒருவரின் வயலில் ட்ரோன் மூலம் மருந்து தெளித்து செயல் விளக்கம் செய்யப்பட்டது. 

ட்ரோனின் மொத்த மதிப்பீட்டில் 50 சதவீதம் மானியத்தில் மத்திய அரசு வழங்குவதாகவும் இதன் மூலம் மருந்து தெளிப்பதால் ஒரு மணி நேரத்தில் 5 ஏக்கர் வரை விரைவாக மருந்துகளை தெளிக்க முடியும் என்று செயல்முறை விளக்கத்தில் எடுத்துக் காண்பிக்கப்பட்டது. பாரதிய கிசான் சங்கத்தினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

மேலும் படிக்க | ட்ரோன் பறக்கத் தடை விதித்து காவல்துறை உத்தரவு… 

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »