Press "Enter" to skip to content

ஈச்சர் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட குட்கா… டிரைவர் தலைமறைவு!!!

வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க இருப்பதால் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த போபால் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

மத்திய  

பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா  தாக்கல் செய்த மனுவில், ஆர்.எஸ்.எஸ். அமைப் 

பின் மாணவர்  

பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ. 

பி.வி. 

பி. அமைப்பைச் சேர்ந்தவர் எனக் குறிப் 

பிட்டுள்ளார்.

அவரது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்த்ரீகங்களிலும், மூட நம் 

பிக்கைகளிலும் நம் 

பிக்கை கொண்டவர் எனவும், தன்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக காவல்துறையில் புகாரளிக்க எவருக்கும் தைரியமில்லை என்றும் மனுவில் குறிப் 

பிட்டுள்ளார்.

நரபலியில் இருந்து தப் 

பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன்  

பிப்ரவரி 17ம் தேதி சென்னை வந்ததாகவும், தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் தன்னை, குடும்பத்தினரும், ஏ. 

பி.வி. 

பி. அமைப் 

பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடுவர் என மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார்.

வலுக்கட்டாயமாக தன்னை போபாலுக்கு  கொண்டு சென்று விட்டால் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது என மனுவில் கூறியுள்ளார்.  தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் தனக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், இணையத்தில் பெறப்பட்ட புகாரும் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அப்போது மனுதாரர் ஷாலினி ஆஜராகி தனக்கு பாதுகாப்பு வழங்கிய தட்சிணாமூர்த்தி, விக்னேஷ் ஆகியோருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.   

பின்னர் நீதிபதி, இந்த நூற்றாண்டிலும்  

பில்லி சூனியம், மாந்திரீகம் ஆகியவற்றை நம் 

பி, நரபலி கொடுக்கப்படுவதாக கேள்விப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

பெண்ணுக்கும், அவருக்கு உதவிய இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு குறித்து ஷாலினி சர்மாவின் பெற்றோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

நரபலி தொடர்பாக ஷாலினி புகார் அளித்த விவகாரத்தில் போபால் காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிக்க:  மயில்சாமியின் மரணம் குறித்து தவறான செய்தி அனுப் 

பினால் சட்டப்படி நடவடிக்கை…. தந்தையின் இறப்பைக் குறித்து விளக்கம் அளித்த மகன்கள்!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »