Press "Enter" to skip to content

”உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை…..” ஓபிஎஸ்!!!

கோவையைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னனூர், காரமடை மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் இயங்கி வரும் 300க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில், 80 சதவீத குவாரிகள் உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் அத்து மீறல்…புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

இந்த கல் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கற்கள், ஜல்லிகள், எம்.சாண்ட் போன்றவை சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்தப்படுவதாகவும், அதற்கு அதிகாரிகள் உடந்தையாக செயல்படுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த  பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி தாக்கல் செயப்பட்டுள்ள அறிக்கையில், உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக குவாரிகள் இயங்கி வருகிறதா? என தாசில்தார்கள் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க |

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
com/posts/tamilnadu/A-good-snake-entered-the-inpatient-ward-of-the-Government-Medical-College-Hospital” target=”_blank” rel=”noopener”>அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் வார்டில் புகுந்த நல்ல பாம்பால் பரபரப்பு..!

ஆய்வின் முடிவில் மனுவில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் படி, கோவை மாவட்டதில் அனுமதியின்றி சட்ட விரோதமாக குவாரிகள் எதுவும் இயங்கவில்லை என தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

மேலும், கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக கூறப்பட்ட புகாருக்கும் தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்ட விரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க குழுக்குள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுக்கள் கடத்தலை தடுக்கும் வகையில் சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா…!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »