Press "Enter" to skip to content

தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக காங்கிரஸ்….!

மகாராஷ்டிராவில் மெகா விகாஸ் கூட்டணியிலான சிவசேனா ஆட்சி உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்று வந்தது. மாநில முதலமைச்சரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அவரது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டி எதிர்ப்பு தெரிவித்தார்.  இதனால் பெரும்பான்மை இழந்த உத்தவ் தாக்கரே, நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தோல்வியுற்று, முதலமைச்சர் பதவியை  ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து, சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.  இதனால் பாஜகவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றனர்.

இந்நிலையில் இரண்டு அணிகளாக பிளவுற்ற சிவசேனாவில் சின்னம் யாருக்கு என்ற குழப்பம் ஏற்பட்டது.  அண்மையில் தேர்தல் ஆணையம் ஷிண்டே அணியினை உண்மையான சிவசேனாவாக அங்கீகரித்தது.  இதனால் தொடர்ந்து அணியினருக்குமிடையே மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன், ஸ்ரீகாந்த் ஷிண்டேவை அவதூறாகப் பேசியதாக உத்தவ் தாக்கரே ஆதரவு எம்பியான சஞ்சய் ராவத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், கூலிப்படையை ஸ்ரீகாந்த் ஷிண்டே பணியமர்த்தியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.  இதனை கண்டித்து தானே பகுதியில், ஏக்நாத் அணி சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முதலமைச்சர் மகன் மீது அவதூறு குற்றச்சாட்டை முன்வைத்ததாக காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஜெகன் மோகன் ரெட்டியை சைக்கோ என விமர்சித்த சந்திரபாபு நாயுடு…!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »