Press "Enter" to skip to content

உலக அமைதியே முக்கியம்… பிரதமர் மோடியுடன் விவாதம்!!!

ஒரு சமகால கலை கண்காட்சிக்கு வருகை தந்த சேகரிப்பாளர் ஒருவர், புகழ்பெற்ற கலைஞரான ஜெஃப் கூன்ஸின் (Jeff Koons) சிறிய கண்ணாடி சிற்பத்தின் மீது தவறுதலாக கவிழ்ந்து, துண்டு துண்டாக சிதறியது.

கூன்ஸின் புகழ்பெற்ற “பலூன் நாய்” தொடர்களில் ஒன்றான பளபளப்பான நீல சிற்பத்தின் மதிப்பு 42,000 டாலர்கள் ஆகும். மியாமியில் உள்ள ஆர்ட் வின்வுட்டில் விஐபி முன்னோட்டத்தின் போது இந்த விபத்து ஏற்பட்டது.

மேலும் படிக்க | திறனற்ற ஆப்கானிஸ்தான்…. அறிவுரை வழங்கிய பாகிஸ்தான்….. காரணம் என்ன?!

இந்த விபத்தை எதிர்பாராத சில சேகரிப்பாளர்கள் இது செயல்திறன் கலை அல்லது அரங்கேற்றப்பட்ட ஸ்டண்ட், அதாவது ப்ரான்க் என்று நினைத்தனர். ஆனால் இந்த விபத்தானது பலரையும் கவலைக்கு உள்ளாக்கியது.

கூன்ஸ் சிற்பத்திற்கு நிதியுதவி செய்த பெல்-ஏர் ஃபைன் ஆர்ட்டின் கலை ஆலோசகரான பெனடிக்ட் காலுச், அந்தப் பெண் வேண்டும் என்றே கலையை உடைக்க விரும்பவில்லை என்றும், இந்த கலைக்காக கட்டப்பட்டகாப்பீடு சேதத்தை ஈடுசெய்யும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க | ”இந்தியாவுடனான உறவில் ஆழ்ந்த மரியாதை….” ஆஸ்திரேலியா அமைச்சர்!!

கூன்ஸ் ஒரு அமெரிக்க ஓவியர் மற்றும் சிற்பி ஆவார். அவர் பலூன் விலங்குகள் உட்பட அன்றாட பொருட்களிலிருந்து இன்ஸ்பைர் ஆகி, சுமார் $91 மில்லியனுக்கு மேலும் அவரது படைப்புகள் ஏலம் போவது குறிப்பிடத்தக்கது. அவரது படைப்புகள் நுண்கலை என்றால் என்ன என்ற கருத்துகளுக்கு சவால் விடுகின்றன.

அவரது பலூன் நாய் சிற்பங்கள் ஒரு அடி (30 சென்டிமீட்டர்) உயரத்தில் இருந்து 10-அடி (மூன்று-மீட்டர்) உயரம் வரை அளவு வேறுபடுகின்றன. மேலும் தெளிவான வண்ணங்களில் வருகின்றன. இந்நிலையில் அவரது சேதமடைந்த இக்கலை கலை பிரியர்களுக்கு பெரும் மன வருத்தத்தைக் கொடுத்துள்ளது.

— பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ”மீண்டும் ஒருமுறை உதவினால்….” சீனாவை எச்சரித்த அமெரிக்கா!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »