Press "Enter" to skip to content

அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்த குடிசைகள்…

தூத்துக்குடிமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா வருகிற 25-ந் தேதி(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு அன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. 

பின்னர் காலை 5.00 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.  

மேலும் படிக்க | நிம்மதியா மொட்டை கூட அடிக்க முடியலை- மொட்டையடிக்க அதிக கட்டணம் கேட்டதால் பக்தர்கள் தர்ணா… 

திருவிழாவின் முக்கிய நாட்களான 5-ம் திருநாள் மார்ச் 1-ந் தேதி இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் வைத்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.  

7-ம் திருநாளான 3-ந்  தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. 

5 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.  

மேலும் படிக்க | பூத்தேரில் பவனி வந்த கோட்டை மாரியம்மன் … 

8-ம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.  

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் 6-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.  

11-ம் திருநாளான 7-ந் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு சுவாமியும் அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க | சர்வதேச கலை மற்றும் கலாச்சார விளையாட்டு திருவிழா; பல்வேறு பிரபலங்கள் பங்கேற்பு… 

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »