Press "Enter" to skip to content

உக்ரைன் அமைதி தொடர்பாக ஜி-20 உச்சி மாநாட்டில் அழுத்தம் கொடுக்கப்படும் – பிரதமர் மோடி!

நாட்டின் அனைத்து துறைகளையும் பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கைப்பற்றி நாசமாக்கியுள்ளதாக காங்கிரஸ் எம்பி சோனியாகாந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி காரிய குழுயின் 85 வது மாநாடு, சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் இன்று இரண்டாம் நாளாக நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாநாட்டிற்கு வருகை புரிந்த பிரியங்கா காந்திக்கு சாலை முழுவதும் ரோஜா மலர்களை கொட்டி வைத்து பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

காங்கிரஸ் மாநாட்டில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் வாக்குகளே உதவும் – மத்தியப்புலனாய்வு அமைப்புகளின் சோதனைகள் பலனளிக்காது என தெரிவித்தார். நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க பாஜக சதி செய்து வருவதாக குறிப்பிட்ட அவர், பாஜகவை தோற்கடிக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகள் மீண்டும் இணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க : வரும் வரவு செலவுத் திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 

1000 திட்டம் அறிவிப்பு…!

இதையடுத்து பேசிய சோனியா காந்தி, காங்கிரசின் இந்திய ஒற்றுமை நடைபயணம், இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை என குறிப்பிட்டார். நாட்டின் அனைத்து துறைகளையும் பாஜக கைப்பற்றி நாசமாக்கியுள்ளதாகக் கூறிய அவர், சில தொழிலதிபர்களுக்கு மட்டும் சாதகமாக செயல்பட்டு பொருளாதார சீரழிவை ஏற்படுத்தி வருவதாகவும் சாடினார்.

முன்னதாக, 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »