Press "Enter" to skip to content

“30% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை”- ஃப்ளிப்கார்ட்

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரின் ஜீன் பியர் உலக வங்கியின் புதிய தலைவரைக் குறித்து  ஊடகங்களுக்கு விளக்கிக் கொண்டிருந்த போது தவறான பெயரை உச்சரித்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது. 

மாறிய அதிபர்:

அமெரிக்காவில் வினோதமான சம்பவம் நடதுள்ளது.  அங்கு செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரின் ஜீன் பியர் அமெரிக்க அதிபரின் பெயரையே தவறாக கூறிவிட்டார்.  அதாவது அதிபர் ஜோ பைடனுக்கு பதிலாக,  முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பெயரை கூறியுள்ளார். 

நடந்தது என்ன?:

 

ஒவ்வொரு நாளும் ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகை மூலம் பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கமளிக்கப்படுகிறது.  வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரின் ஜீன் பியர் உலக வங்கியின் புதிய தலைவரைப் பற்றி ஊடகங்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.  அப்போது அமெரிக்க அதிபரைக் குறித்து பேசுகையில் ஜோ பைடனுக்கு பதிலாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பெயரை உச்சரித்து விட்டார்.

பின்னோக்கி:

அந்த சந்திப்பில், “ஒரு மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் அனைவரும் பார்த்ததைப் போல், அதிபர் ஒபாமா அறிவித்தார்…’ எனக் கூறியதும் சில ஊடகவியலாளர்கள் அவரை இடைநிறுத்தியதும் தான் அவரது தவறை உணர்ந்தார்.  அவர் உடனடியாக அதற்கு மன்னிப்புக் கேட்டு அதிபர் பைடனின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறினார்.   அதன் பிறகு தொடர்ந்து பேசிய ஜீன், ‘ஆஹா! ஆமா, நாம் முன்னோக்கிச் செல்லவில்லை, பின்னோக்கிச் செல்கிறோம் என்பது எனக்குத் தெரியும். நாம் முன்னேற வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  மீண்டும் ஆலா கார்ட் மெனு… இன்னும் தொடர் வண்டிபயணம் இனிதாகும்!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »