Press "Enter" to skip to content

ஏரியில் படகு கவிழ்ந்து ஆறு பேர் பலி…

ஒசூரில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற தலைமை காவலர் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஒசூர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

நடந்தது என்ன?:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி நகை பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில் தலைமை காவலர் முனுசாமி கொள்ளையர்களால் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.  அவருடன் ஒரு தலைமை காவலர், எஸ்ஐ என 2பேர் காயமடைந்தனர்.

விசாரணையும் கைதும்:

இது தொடர்பாக, கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் கே.ஆர்.புரா அருகே உள்ள ஜி.எம்.பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற கொள்ளையனை 15ந் தேதி இரவு போலீசார் கைது செய்தனர்.  இக்கொலையில், மேலும் தொடர்புடைய கர்நாடகாவில் பதுங்கி இருந்த முஜாமில், விக்னேஷ், அமரா ஆகிய 3 பேரையும் கடும் போராட்டத்திற்கு பிறகு தனிப்படை காவல் துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். 

 

நீதிமன்றம் விசாரணை:

போலிசார் கஸ்டடியில் இருந்த கிருஷ்ண மூர்த்தி இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.  விக்னேஷ் என்பவர் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் முஜாமில், அமர் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு, இந்த வழக்கு ஒசூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வந்தது.

தீர்ப்பு:

நீதிபதி ரோசிலின் துரை அவர்கள் அளித்த தீர்ப்பில் அமர் என்பவரை விடுதலை செய்தும் முஜாமின் என்பவர் போலிசார் பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக 3 ஆண்டுகளும், காவலரை கொன்றதற்காக 2000 ரூபாய் அபராதத்துடன் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

ஒசூரில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்திய இவ்விவகாரத்தில் ஆறரை ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:   ஈச்சர் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட குட்கா… டிரைவர் தலைமறைவு!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »