Press "Enter" to skip to content

1 லட்சத்து 69 லட்சம் பேர் வாக்களித்தாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 74.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸை சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா இந்தாண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.  இதனையடுத்து இந்தத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.  திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக சார்பில் தென்னரசு என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். 

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில்  மாலை 6 மணி வரை விறுவிப்பாக நடைபெற்றது மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.  குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், முதியோர் சிரமம் இன்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  மேலும் பதற்றமான வாக்கு சாவடிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலபடுத்தப்பட்டிருந்தது.

முன்னதாக காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் கச்சேரி வீதி அரசுப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாடியில் வாக்களித்தார். 

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு  கூட்டணி வரலாறு காணாத அளவுக்கு வெற்றி பெறும் என்று கூறினார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு கருங்கல்பாளையம்  மாநகராட்சி துவக்க பள்ளி வாக்குசாவடியிலும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் அக்ரஹாரம் மதராசா பள்ளி, சாவடியிலும் ,நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, கலைமகள் அரசு பள்ளி  வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.

இதனிடையே  மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு  நிறைவடைந்தது.  6 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து  அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டிகளுக்கு  சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிட்டதக்கது.  இந்த நிலையில்  ஈரோடு கிழக்கு  இடைத்தேர்தலில் 74.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:    ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்…!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »