Press "Enter" to skip to content

போதையில் ஏற்பட்ட தகராறு… இரண்டு பேருக்கு கத்தி குத்து…

100 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக இரண்டு தொழிலதிபர்களிடம் பண மோசடி செய்த விவகாரத்தில் ஹரி நாடாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரிடம் கைது நடவடிக்கை காட்டி அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.

குஜராத்தைச் சேர்ந்த இஸ்மாயில் சக்ராத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பஷீர் ஆகிய தொழிலதிபர்கள் இருவரும் ரூ.100 கோடி வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி பணம் பெற்று தங்களை ஏமாற்றியதாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஹரி நாடார் மீது புகார் அளித்தனர். 

மேலும் படிக்க | நடிகை விஜயலட்சுமியால் மீண்டும் கைது செய்யப்படும் ஹரிநாடார்..!

புகார்தாரர்கள் இருவரும் இணைந்து குஜராத்தில் பலசரக்கு ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். அங்கிருந்து அவர்கள் அரபு நாடுகளுக்கு பலசரக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து வரும் நிலையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்களது தொழில் பெரும் நஷ்டம் அடைந்துள்ளது. அதனை சரி செய்வதற்காக வங்கியில் ரூபாய் 100 கோடி கடனாகப் பெற முயற்சித்து வந்துள்ளனர். 

பெங்களூரைச் சேர்ந்த முகமது அலி மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த அருள்தாஸ் ஆகியோரின் மூலம் தொழிலதிபர்களின் விவரங்களை அறிந்த ஹரி நாடார் அவர்கள் இருவரையும் தொடர்பு கொண்டு, தான் CAPITAL UP Investments என்ற நிறுவனம்யின் ஆசிய நாடுகளுக்கான நிர்வாகி என்றும் இதன் மூலம் இந்தியாவில் பல தொழிலதிபர்களுக்கு 6 சதவீத வட்டியில் அதிக அளவில் கடன் பெற்று கொடுத்துள்ளதாகவும் கூறி, அவற்றை நிரூபிக்க சில போலி ஆவணங்களையும் காண்பித்துள்ளார். 

மேலும் படிக்க | மீண்டும் காளி அவதாரத்தில் நடிகை வனிதா!! இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம் மிகுதியாக பகிரப்பட்டு!!

இதனை நம்பிய தொழிலதிபர்கள் இருவரும் சென்னை தி.நகர் வந்து, ரூ.100 கோடி பணத்தை 6 சதவீத வட்டியில் பெற்றுத் தருவார் என நம்பி, அதற்கு 2 சதவீத கமிஷனாக ரூ.1.5 கோடி பணத்தை ஹரி நாடாருக்கு  மூன்று தவணைகளாக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், வங்கி கடன் குறித்து கேட்டபோதெல்லாம் தற்போது தான் தேர்தல் வேலைகளில் வேலையாக இருப்பதாகவும் தேர்தல் முடிந்ததும் உடனடியாக பெற்றுத் தருவதாக கூறி அலைக்கழித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் வங்கி கடன் ஒப்பந்த பதிவுக்கான பத்திரப்பதிவு நடக்கும்போது ஹரி நாடார் கொண்டு வந்த பத்திரங்கள் அனைத்தும் போலியானது என தொழிலதிபர்களுக்கு தெரியவந்துள்ளது. அங்கு ஏதேதோ காரணம் சொல்லி ஹரி நாடார் சமாளித்ததாகவும், திருநெல்வேலி வருமாறு இரண்டு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பால் வியாபாரியை கொலை செய்த கீழ் மகன் (ரவுடி)க்கு ஆயுள் தண்டனை…

அங்கு சென்ற தொழிலதிபர்கள் தங்களுக்கு லோன் வேண்டாம் எனவும் தாங்கள் செலுத்திய ரூபாய் ஒன்றரை கோடி பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு ஹரிநாடார் தான் விரைவிலேயே அந்த பணத்தை தருவதாக கூறி, அதன் பின் அவர்களின் கைபேசியை எடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் தொழிலதிபர்கள் இருவரும் தாங்கள் ஹரி நாடாரால் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2021 மே மாதம் தி.நகர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து கணினிமய புகார் அளித்துள்ளனர். விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் மோசடி செய்யப்பட்ட பணம் ஒரு கோடிக்கும் அதிகம் என்பதால் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு தொழிலதிபர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். 

மேலும் படிக்க | ஆலங்குளம் அருகே தொழிலாளி மீது கொலைவெறி தாக்குதல்..!

அதன்பேரில் தொழில் அதிபர் பஷீர் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஹரி நாடார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் தங்களிடமிருந்து ஹரிநாடார் ஏமாற்றிய ரூபாய் 1.5 கோடி பணத்தை மீட்டுத் தருமாறும் புகார் அளித்தனர்.

இந்த புகார் தொடர்பாக மத்திய குற்ற பிரிவில் உள்ள ஆவண மோசடி தடிப்பு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஹரி நாடார் மோசடி செய்தது உறுதியானதால் , கைது நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினர் திட்டமிட்டனர். ஏற்கனவே பெங்களூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஹரி நாடாரை, இந்த வழக்கில் கைது காட்டியுள்ளனர்.

பெங்களூர் சிறையில் இருக்கும் ஹரி நாடாரை காவலில் எடுத்து விசாரிக்க அடுத்த கட்ட சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

— பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | பாதிரியார் இல்லத்தை முற்றுகையிட்ட 10 பேர் கைது…

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »