Press "Enter" to skip to content

தமிழை எதிர்த்தால் இளைஞர்கள் சும்மா விட மாட்டார்கள்…எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்!

தமிழ்நாடு முழுவதும் கிராமப்பகுதிகளில் பாழடைந்துள்ள நூலக கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிய நூலக கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மேலும் படிக்க | முதலமைச்சர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதில் பெருமை அமைச்சர் பேச்சு
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் சேதமடைந்த நிலையில் இருக்கும் கட்டிடத்தை பிடித்து புதிய நூலக கட்டிட அமைக்க உத்தரவிடக் கோரிய  வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கிராமப்பகுதிகளில் பாழடைந்துள்ள நூலக கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிய நூலக கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர்
கலந்தர் ஆசிக் உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனு..

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கடந்த 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீட்டின்படி அந்தப் பகுதி மாணவர்கள் பொதுமக்கள் பயன்படும் வகையில் நூலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது இந்த நூலகம்  மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு பழுதடைந்தது இதனால் அந்தக் நூலகம்  மாற்றப்பட்டு அந்தப் பகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் செயல்பாட்டில் இல்லாத  நூலக கட்டிடத்தை சிலர் ஆக்கிரப்பு செய்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவே இந்த கட்டிடத்தை இடித்து மீண்டும் புதிய கட்டிடம் கட்டி நூலகம் திறக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் படிக்க | நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளது – தொடர்வண்டித் துறை இணை அமைச்சர்

 

New library building awaiting inauguration | திறப்பு விழாவுக்காக  காத்திருக்கும் புதிய நூலக கட்டிடம்

புதிய நூலக கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அரசுத் தரப்பில் பாழடைந்த கட்டிடத்தை இடித்து அகற்ற ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டுள்ளது. அகற்றும் பணி 2 வாரத்தில் முடியும். என கூறப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், தமிழ்நாடு முழுவதும் கிராமப்பகுதிகளில் பாழடைந்துள்ள நூலக கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிய நூலக கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »