Press "Enter" to skip to content

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான்- உதயநிதி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரசின் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக தென்னரசு, தேமுதிக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதியில் மொத்தம் 74 புள்ளி 79 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதலில் 397 தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 250 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 104 வாக்குகளும் பெற்றனர். அதனை, திமுக கூட்டணி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

அதனைத் தொடர்ந்து, இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.  2011-ல் ஈரோடு கிழக்குத் தொகுதி உருவானதில் இருந்து அதிக வாக்கு வித்தியாசத்தை பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புதிய வரலாறு படைத்துள்ளார். 

 

இதையும் படிக்க : மேற்கு வங்க இடைத்தேர்தலில் பின்னடைவை சந்தித்தார் மம்தா பானர்ஜி…!

இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், அதிகாரிகள் முறையாக முடிவுகளை தெரிவிக்கவில்லை எனவும், செய்தியாளர்களை வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கவில்லை எனவும் கூறி, பத்திரிக்கையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன், வாக்கும் எண்ணும் பணி துரிதப்படுததப்பட்டுள்ளதாகவும், அறிவிப்புகள் முறையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 6 சுற்றுகள் முடிவில், திமுக கூட்டணி 46 ஆயிரத்து 286 வாக்குகளும், அதிமுக 16 ஆயிரத்து 487 வாக்குகளும் பெற்றுள்ளனர்.  மேலும் நாம் தமிழர் கட்சி ஆயிரத்து 2 ஆயிரத்து 342 வாக்குகளும் தேமுதிக 386 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்களித்து வெற்றி முகத்தை நாட்டியுள்ள வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளில் விளம்பர ஒட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »