Press "Enter" to skip to content

இரட்டை இலை சின்னம் இருந்தும் அதிமுக பெரிய தோல்வி…ஈபிஎஸ்சை குற்றம் சாட்டும் டிடிவி!

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி  ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் ஈபிஎஸ் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்தார். ஏற்கெனவே பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து எதுவும் கூறவில்லை எனவும், இதனை அடிப்படையாக கொண்டு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யவேண்டும் எனவும் அந்த மனுவில்  குறிப்பிடப்பட்டது. 

 

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஈபிஎஸ் தரப்பு செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும், கட்சியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது என்றும், எந்த நோட்டீசும் இல்லாமல் நீக்கியுள்ளனர் என்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையும் படிக்க : சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்தார் குடியரசுத்தலைவர்!

மேலும் கட்சியை விட்டு நீக்க பொதுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என்றும், கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிக்கை எடுக்கமுடியும் என்றும் ஓபிஎஸ் தரப்பு வாதத்தில் தெரிவிக்கப்பட்டது. 

ஓபிஎஸ் தரப்பு வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், ஈபிஎஸ் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களிடம் விளக்கம் கோராமல் தீர்மானத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று கூறி, ஈபிஎஸ் தரப்பு பதிலளிக்க வரும் 17 ஆம் தேதி வரை காலஅவகாசம் அளித்தும், அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »