Press "Enter" to skip to content

சமையல் செய்து கொண்டிருந்த பெண் மீது தீப்பற்றியதால் பரபரப்பு…

நாகப்பட்டினம் | நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் சுத்தகரிப்பு குழாய் 21 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று இரும்பு குழாய் பதியப்பட்டுள்ளது. இந்த குழாயில் நேற்று இரவு ஒரு குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் செல்லக் கூடிய குருடாயில் கடல் நீரில் கலந்து மிதந்து வருகிறது.

இதனால் ஆயில் நெடி காற்றில் பரவுவதால் கடலோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கூடுதல் ஆட்சியர் சிபிசிஎல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் வட்டாட்சியர் ஆகியோர் ஆயில் மிதந்து வரும் கடற்கரை பகுதிகளை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | மெட்ரோ வாசிகளுக்கு ஓர் அறிவிப்பு : சென்னை மெட்ரோவில் பரிசோதகர்கள் கிடையாது – நிர்வாகம்

மேலும் அக்கிராம மக்களுடன் அதிகாரிகள் சிபிசிஎல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சில்லடி தர்கா கடற்கரை செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாகவும், இதனால் குரூட் ஆயில் கடல் நீரில் கலப்பதால்   உயிரினங்கள் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்களும் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

இதனால் இப்பகுதியில் செல்லும் குருடாய் குழாயை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடலில் குரூட் ஆயில் கலந்த சம்பவம் மீனவ கிராம பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து டோனியர் விமானம் மூலமாக குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை இந்திய கடலோர காவல் படையினர் பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | வெகு விமர்சையாக நடந்த முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு…

 

கடலில் குருடா ஆயில் பரவி உள்ளதை  நீக்குவதற்கான வழிமுறைகளான ஆயில் ஸ்பில் டிஸ்பரசன் பொடி மூலமாகவா அல்லது குழாய் மூலம் ஆயிலை  நீக்குவதா அல்லது கடல் நீரை படிய வைத்து அதனை அகற்றுவதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டு இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் மற்றும் டோனியர் விமானம் மூலம் ஆய்வு செய்து மேலும்  எவ்வளவு தூரம் ஆயில் பரவி உள்ளது என கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேற்கொண்டு கடலில் ஆயில் பரவாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | பாதாள சாக்கடையால் அவதியுறும் பொதுமக்கள்… நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »