Press "Enter" to skip to content

மின்கம்பி உரசியதில் தீயில் கருகிய 2 ஏக்கர் கரும்பு தோட்டம்…

புதுக்கோட்டை | இலுப்பூர் செளராஷ்டிரா தெருவில் அமைந்துள்ளது இரட்டை பிள்ளையார் கோயில் அப்பகுதியில் சிறப்பு பெற்ற தலமான இக்கோயிலில் குடமுழுக்கு நடத்தப்பட்டு 12 வருடங்கள் ஆனது. 

இதனையொட்டி நிகழாண்டு குடமுழுக்கு நடந்த கோயில் விழா குழு சார்பில் முடிவு செய்யப்பட்டு கடந்த சில நாட்களாக சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவடைந்தது. 

மேலும் படிக்க | வெவ்வேறு மாவட்டங்களில் வெகு விமர்சையாக நடந்த குடமுழுக்கு… 

கடந்த 1ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ விசனம், பஞ்சகவ்யம்,மஹா கணபதி சடங்குத்தீ, நவக்கிரகஹ சடங்குத்தீ,லெஷ்மி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்று வந்தது. 

இதனை தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கங்கை, காவிரி, இராமேஸ்வரம் உள்ளிட்ட நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள்,பட்டர்கள் சுமந்து வந்து வேதமந்திரங்கல் முழங்க கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு செய்தனர். 

தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் வடை பாயசத்துடன் தடல் புடலான சைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. 

மேலும் படிக்க | வெகு விமர்சையாக நடந்த முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு… 

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »