Press "Enter" to skip to content

தனியார் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழப்பு..!

தேனி | ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் செல்வம் தொல்லியல் ஆய்வாளராகவும் செயல்பட்டு வருகிறது.

மலைகளும், காடுகளும் சூழ்ந்த வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் பழங்கால நடுகற்கள், கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள் போன்றவற்றை கண்டுபிடித்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வருசநாடு அருகே கருப்பையாபுரம் பகுதியில் மலைக்குன்றின் உள்ளே பாறைகளில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளார்.

மேலும் படிக்க | இந்து தர்மத்தின் ‘போப்’ ஆண்டவரைப் பாதுகாக்க வேண்டும்- கைலாசா பிரதிநிதி…

பூச்சிக்கல்பாறை என்று அழைக்கப்படும் இந்த குன்றின் உள்ளே குகை போன்று மனிதர்கள் தங்கும் வகையில் அமைந்துள்ள பாறையில் பண்டைய கால மக்களின் வாழ்க்கை முறையை விளக்கும் விதமாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டை சமூகத்தை சேர்ந்த மக்கள் இந்த குகை பகுதியில் வாழ்ந்துள்ளதாகவும், அவர்கள் வாழ்க்கை முறையை காட்சி படுத்தும் விதமாக இந்த ஓவியங்கள் வரையப்பட்டள்ளது.

அந்த ஓவியத்தில் மான், புலி போன்ற விலங்குகளும், அந்த விலங்குகளை வேட்டையாடும் மனிதர்கள், மனிதர்களுக்குள் ஏற்படும் சண்டை போன்றவற்றை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற பழமையான ஓவியங்கள் நடுகற்கள் போன்றவை இருப்பது கற்காலத்தில் இந்த பகுதியில் மக்கள் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்துவதாக இருப்பதாக ஆசிரியர் செல்வம் தெரிவித்தார்.

மேலும் படிக்க | கோடை கால மின் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது – செந்தில் பாலாஜி உறுதி!

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »