Press "Enter" to skip to content

வடமாநில தொழிலாளர்களை விட்டுவிட்டு, பிரதமர் மோடிக்கு எதிராக போராடுவதே சரியாக இருக்கும் – திருமாவளவன் !

சிஜிஎம் பிக்சர்ஸ் – நாச்சியார் புரொடக்சன்ஸ் தயாரித்து ஆதிரை தமீம் அன்சாரி இயக்கும் படம் செஞ்சமர். இப்படத்தின்  துவக்கவிழா சென்னை பிரசாந்த் ஸ்டுடியோயில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

நாதகவின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது

தமிழ்நாட்டு மக்களை நினைக்கும் போது பாவமாக இருக்கு  – சீமான்

மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்ய காசு இல்லை. ஆனால் தேர்தல் வந்தால் எங்கிருந்து காசு வருகிறது என்று தெரியவில்லை நம்ம மக்களை நினைக்கும் போது ரொம்ப பாவமாக இருக்கிறது. வருந்தாமல் இருக்க முடியாது. ஆனால் விட்டுட்டு போகவும் முடியாது. இப்போது ரொம்ப அதிநவீனத்துக்கு வந்து விட்டார்கள். 

மேலும் படிக்க | வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு: முதலீட்டு வடிவில் தமிழ்நாட்டில் வருகிறது – தொல். திருமாவளவன்

 இளையதலைமுறை விழித்து கொள்ள வேண்டும் :

எங்கள் ஊர் எம்.எல்.ஏ தொகுதிக்கு வருவாரா, நல்லது செய்வாரா என்று மக்கள் நினைத்தது போக , எங்க ஊர் எம்.எல்.ஏ சாவாரா? எப்போது சாவார் என்று நினைக்கும் அளவுக்கு மோசமாக போய் விட்டது. இந்த ஜனநாயகத்துக்கு தானா எங்கள் முன்னோர்கள் போராடி விடுதலை வாங்கி கொடுத்தார்கள். இளைய தலைமுறை விழித்து கொள்ள வேண்டும். அரசியல் புரிதலும், தெளிவும் வர வேண்டும். அருகில் இருக்கும் கேரளாவை பார்த்தாவது கற்று கொள்ள வேண்டும்.  

 

தமிழர்கள் இடம் பெறவே முடியாது:

ஒரு நாட்டின் சொந்த மக்களை ராணுவம் தாக்குதல் நடத்தி அழிக்க கூடாது. ஆனால் இந்திய நாட்டு ராணுவத்தில் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், பீஹாரி, குஜராத்தி இடம் பெற முடியும். ஆனால் இலங்கை ராணுவத்தில் தமிழர்கள் இடம் பெறவே முடியாது. ஒரு நாட்டு ராணுவத்தில் மக்கள் இடம் பெறவே முடியாது என்றால் அந்த மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? எந்த ஆயுதத்தை வைத்து சிங்களர்கள் அடித்து ஒழிக்கிறார்களோ, அதே ஆயுதத்தை வைத்து தான் எங்கள் இன மக்களை காக்க வேண்டும்.

மேலும் படிக்க | பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வதந்தி காணொளி…டிடிவி பதிவிட்ட ட்விட்டர் பதிவு

முன்பு – கூலி இப்போ – புலி

கூகுளில் முன்பு தமிழன் என்று தட்டினால் கூலி என்று வரும். இப்போது புலி என்று வரும். உண்மையிலே பாரின் ரிட்டன் நான் தான். என்னை படாதபாடு படுத்துவார்கள். இது ஒரு படம் அல்ல. படைப்பு. இதை எடுக்க துணிந்த இயக்குநருக்கு பாராட்டுக்கள் என்றும் இது ஒருவரின் வேலை, கடமை இல்லை. ஒவ்வொருவரின் கடமை என்று கூறினார்

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »