Press "Enter" to skip to content

வடமாநிலத்தவர் வதந்தியில் பாஜக இரட்டை வேடம் – மா.சு

பா.மாணிக்கத்தின் நூற்றாண்டு நிறைவு

சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவானர் அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பா.மாணிக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ்  குழு தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்

விசிக தலைவர் திருமாவளவன் மேடை பேச்சு : 

அச்சுறுத்தலில் இருந்து அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுக்க வேண்டும் மிகப்பெரிய தீங்கு நம்மை சுற்றி இருக்கிறது.பீகாரில் எப்படிப்பட்ட அவதூறுகளை பரப்புகிறார்கள் தமிழ்நாட்டு பீகார் சேர்ந்த தொழிலாளர்களை தாக்குகிறார்கள் என்று பொய் செய்திகளை பரப்பி தேசிய அளவில் பதட்டத்தை ஏற்படுத்துகிறார்கள்.  தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்களை பாதிக்கும் அளவில் சம்பவங்கள் நடைபெற வில்லை. அது தமிழ்நாட்டில் நடந்தது என்று பாஜக பரப்பி வருகிறது.  

பாஜகவிற்கு எதிரானவர்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது காங்கிரசுடன் கைகோர்த்து விடக் கூடாது என்று இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுகிறார்கள். முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் வரலாற்று சிறப்பு மிக்க முறை. பாஜகவில் எதிர்ப்பு சக்திகள் அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற உரையை முதல்வர் அன்று பேசினார்.  இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில்  இடதுசாரிகளையும் காங்கிரஸ் கட்சியில் ஒன்றாக சேர்த்து தமிழக முதலமைச்சர் வைத்து இருக்கிறார்.

சாதன சக்திகள் அச்சப்படும் இயக்கம் பொதுவுடமை இயக்கம்… அவர்கள் அளிக்க துடிக்கும் இயக்கங்களின் ஒன்றாக காங்கிரஸ் கட்சியை பார்க்கிறார்கள். நாளை பிரதமராக வரக்கூடிய கட்சி கம்யூனிஸ்ட் கட்சி இல்லை ஆனால் அவரை அழிக்க நினைக்கிறார்கள்.. ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என நினைக்கின்றனர்.  அதனால் தான் தமிழக ஆளுநர் மார்க்ஸ் குறித்து அவதூறாக பேசினார்.

மேலும் படிக்க | இலவச மின்சாரம் அளவு அதிகரிப்பு – தமிழக முதலமைச்சருக்கு நன்றி

அனைத்து ஜனநாயக சக்திகளிலும் ஒன்று சேர வேண்டிய நேரம் வந்துவிட்டது இன்னும் ஓராண்டு காலம் தான் இருந்தது.. சனாதன சக்திகளில் இருந்து இந்த நாட்டை காப்பதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். யார் பிரதமர் என்பது கேள்வி அல்ல பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது என்பது தான் நாம் முடிவு. இது வெறும் தேர்தல் அல்ல மக்களை காக்க வேண்டிய யுத்தம். தேசிய அளவில் அரசியல் கட்சிகளை இணைப்பதில் இடதுசாரி கட்சிகள் பங்கு முக்கியத்துவம்.

மேலும் படிக்க| அரளிப்பாறை மஞ்சுவிரட்டு அதிரடியாக ஆயத்தமாகும் முன்னேற்பாடு

தமிழக முதல்வர் உட்பட அனைத்து பாஜக எதிர்ப்பு கட்சிகளில் தலைவர் ஒன்று சேர்ந்து சுற்று பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் தற்போது உள்ளது. மம்தா பானர்ஜி தனியாக போட்டியிட இருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார் நாம் அனைவரும் ஒன்று சேர்வோம் என்று பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.. சிதறி விட கூடாது. கெவ்ரவம் பார்க்க கூடிய நேரம் இது கிடையாது. மேலும், கூலி தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தமிழகத்தில் மட்டும் அல்ல எந்த மாநிலத்திலும் நடைபெறக்கூடாது என தெரிவித்தார்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »