Press "Enter" to skip to content

நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதிலிருந்தே திமுகவினர் தயாராக வேண்டும் – உதயநிதி பேச்சு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாளை ஒட்டி, சென்னை ராயபுரம் பனைமரத் தொட்டியில்இனிப்புக்கட்டி (கேக்) வெட்டியும் ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கியும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொண்டாடினார். 

234 தொகுதிகளிலும் மக்களின் குறைகளை அமைச்சர்கள் கேட்பார்களா?

கொசுக்களின் உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அழிக்காமல், உற்பத்தி பெருகிவிட்ட இந்த சமயத்தில் அழிக்க நினைப்பது திமுக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் என்றார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 30 அமைச்சர்கள் முகாமிட்டு மக்கள் நலன்கள், தேவைகளை கேட்டு அறிந்ததாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளது 234 தொகுதிகளிலும் மக்களின் குறைகளை அமைச்சர்கள் கேட்பார்களா? தமிழகத்தில் இருக்கும் வட மாநில தொழிலாளர்கள் பற்றிய புள்ளி விவரங்களை தமிழக அரசு பெற்று இருப்பது அவசியம் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தமிழக அரசின் கடமை என்றார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்…

 குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு தற்போது 3.5 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தவணை முறையில் அவர்களிடம் அதற்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

மேலும் படிக்க | பரிசுகள் வேண்டாம்- புத்தகம் போதும் – உதயநிதி அறிக்கை

போக்குவரத்து துறையை தனியாருக்கா?

சென்னை மாநகரில் ஆயிரம் தனியார் பேருந்துகளை தனியார் மூலம் இயக்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பது குறித்தும், முதற்கட்டமாக 500 பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் விடப்பட்டிருப்பது குறித்து கூறிய அவர், இது ஊழல் செய்வதற்கு வழிவகுக்கும். ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்வாணையம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துவிட்டு தற்போது போக்குவரத்து துறையை தனியாருக்கு விட்டுக் கொடுக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்..

அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 3.5 லட்சம் வேலைவாய்ப்பை இளைஞர்களுக்கு அளித்த நிலையில், தற்போதைய திமுக அரசு ஆண்டுக்கு எத்தனை இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கியுள்ளது என்றும் கேள்வி எழுப்பினர். அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் முறையாக தேர்வு நடத்தி பணி வாய்ப்பு வழங்க முடியாமல் விடியா திமுக அரசு செயல்படுகிறது..

மேலும் படிக்க | சென்னையில் 10 நாளில் கொசு பரவல் கட்டுபடுத்தபடும் – துணை மேயர்

 இழப்பீடு வழங்கவில்லை 

மாண்டஸ் புயல் பாதித்து மூன்று மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்காதது ஏன் என்றும் டி ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.தற்போதைய ராயபுரம் தொகுதி எம்எல்ஏவாக இருக்கக்கூடிய ஐ ட்ரீம்ஸ் மூர்த்தி கட்டியுள்ள 100 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுக்கு அப்ரூவல் உள்ளதா என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்..

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »