Press "Enter" to skip to content

வடமாநிலத்தவர்கள் பிரச்சனைக்கு நான் காரணமா? கே.எஸ்.அழகிரிக்கு சீமான் கடும் கண்டனம்!

3 நாள் பயணமாக மதுரை சென்ற முதலமைச்சருக்கு, விமான நிலையத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். 

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்றடைந்த முதலமைச்சருக்கு, அம்மாவட்டத்தின் ஆட்சியர் அனிஸ்சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சர், ”கள ஆய்வில் முதல்வர்” திட்டத்தின் கீழ், அங்கு 5 மாவட்ட பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதையும் படிக்க :

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
com/Udhayanidhi-speech-at-the-gold-awarding-ceremony” target=”_blank” rel=”noopener”>நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதிலிருந்தே திமுகவினர் தயாராக வேண்டும் – உதயநிதி பேச்சு!

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தேனி மாவட்ட தொழில் முனைவோர்கள், விருதுநகர் மீனவ மக்கள் உட்பட 5  மாவட்ட மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர், மோசமான நிதிநிலையில் ஆட்சி அமைத்த திமுக அரசு, அதனை மேம்படுத்தி வரும் நிலையில், நிறைவேற்றப்படாத 27 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுத்து வருதாக தெரிவித்தார். 

இதை தொடர்ந்து  மீண்டும் சட்டத்துறை ரீதியான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதலமைச்சர், மாலை 6 மணிக்கு சிவகங்கை மாவட்டம் கீழடியில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகத்தை பார்வையிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »