Press "Enter" to skip to content

வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் எனவும் அதில் இரட்டை வேடங்கள் போடுவது என்பது திமுகவினருக்கு இயல்பானது எனவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தி எதிர்ப்பு:

“இந்தி தெரியாது போடா” என்று முதலமைச்சரின் மகன் டி-ஷர்ட் கலாச்சாரத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடங்கி வைத்தார் எனவும் விமான நிலையத்தில் என்னிடம் இந்தியில் பேசினார்கள் என்று முதலமைச்சரின் தங்கையும், திமுகவின் எம்பியும் ஒரு பொய்யான புகாரை வழங்கி வடமாநிலத்தவருக்கு எதிரான வன்மத்தைத் தொடங்கிவைத்தார்கள் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.  தற்போது சமூகங்களில் உலவும் பல பொய்யான செய்திகளுக்கும் இவையெல்லாம் காரணங்களாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
  
காழ்ப்புணர்ச்சி அரசியல்:

முதலமைச்சரின் குடும்பத்தினரால் தொடங்கி வைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் தற்போது வட மாநிலத்தவர் மீது திரும்பி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான், “வட மாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதலமைச்சர்?” என தான் கேட்டிருந்ததாகவும் அதனால்தான் பிரச்சனையை திசைதிருப்ப, இப்போது என்மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் கூறியுள்ளார்.

தமிழ் திணிப்பு:

முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், ஒரு சில வட இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட உடன்,  இந்தியாவை தலைமை தாங்க திமுக தலைமை கண்ட பகல் கனவை நினைத்து, எங்களுக்கெல்லாம் பரிதாபப்படத்தான் தோன்றியதே தவிர, பற்றி எரியவில்லை எனவும் பாஜக மொழித் திணிப்பு செய்வதாக, குற்றப் பத்திரிக்கை வாசிக்கும் அவசர குடுக்கை ஆர் எஸ் பாரததிக்கு பதிலளிக்கும் விதமாக அறுபதுகளில் இருந்து ஆட்சி கட்டிலில் பதவி சுகம் அனுபவித்த, திமுக செய்யாத தமிழ் மொழித் திணிப்பை, பள்ளிகளில் “தமிழை கட்டாயப் பாடம்” ஆக்கியதன் மூலம், நாங்கள் தமிழ் மொழித் திணிப்பை செய்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.  மேலும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மொழித் திணிப்பை செய்திருக்கிறது என்பது உண்மைதான் எனவும் தெரிவித்துள்ளார்.

இருபது வேடங்கள்:

வெறுப்பையும் பகையையும் வெளிப்படுத்துவதாக என் மீது அவசர குடுக்கை ஆர். 

எஸ் பாரதி வெளியிட்ட கூற்று ஒரு வகையில் சரிதான் எனவும் திமுகவின் இரட்டை நிலைப்பாட்டின் மீது வெறுப்பும், அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி மீது பகையும், எனக்கும், நான் சார்ந்த இயக்கத்தினருக்கும் எப்போதும் உண்டு எனவும் கூறியுள்ளார் அண்ணாமலை.  மேலும் வட மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களில் தமிழ்நாட்டிற்கு எதிரான கண்டனக் குரல்களை கண்ட பிறகு, எழுந்த அச்சத்தினால், பிள்ளையை கிள்ளிவிட்ட நீங்கள் தொட்டிலாட்ட முன் வந்திருக்கிறீர்கள் எனவும் இரட்டை வேடம் அல்ல, நாடக திமுகவினர் இருபது வேடங்கள் கூடப் போடுவீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:   மகன் உதயநிதி ஸ்டாலினை வைத்து தன்னை வளர்த்து கொள்கிறார்…!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »