Press "Enter" to skip to content

அதிமுகவினர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவில் வழக்குப்பதிவு…. வடசென்னையில் பரபரப்பு..!!

ஆறு மாதங்களுக்கு பிறகு திருச்சி காவிரி பாலம் முழுமையான பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.  திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திருச்சி காவிரி பாலமும் திகழ்கிறது.  

விரிசலடைந்த பாலம்:

திருச்சி – ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட காவிரி பாலம் கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது. பழமையான திருச்சி காவிரி பாலத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்கள் பலமுறை சீர் செய்யப்பட்ட போதிலும், தொடர்ந்து பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டது. 

போக்குவரத்து நெரிசல்:

இதனை தொடர்ந்து காவிரி பாலத்தை சீரமைக்காக ரூ.6 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி பாலம் மூடப்பட்டது.  எனினும் காவிரி பாலத்தில் 2 மீட்டர் இடைவெளி விட்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர்.  இதில் தேர் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பைபாஸ் வழியாக ஸ்ரீரங்கம் பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டது.  காவிரி பாலத்தில் 6 மாதங்கள் பராமரிப்பு, சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.  இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

திறக்கப்பட்ட பாலம்:

தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், மக்கள் பயன்பாட்டிற்காக பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது.  ரூ.6. 

84 கோடியில் சீரமைக்கப்பட்ட பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார்.  பின்னர் போக்குவரத்து காவலர்கள், காவல்துறையினர் இரு சக்கர வாகனங்களில் பயணித்து போக்குவரத்தை தொடங்கிவைத்தனர்.

இதையும் படிக்க:   கொங்கு மண்டலம் அதிமுக கோட்டையல்ல…. இரட்டை இலை வெற்றிச்சின்னம் இல்லை…!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »