Press "Enter" to skip to content

பாஜகவின் கடித போக்குவரத்தாக மாறிய ட்விட்டர்…. வேவு பார்த்து ஆனந்தமடையும் அல்ப்பத்தனம் உள்ளவர் அண்ணாமலை!!!

சென்னை கிழக்கு மாவட்டம் – துறைமுகம் பகுதி கிழக்கு திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சரின்ன் மனிதநேய திருநாள் – நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மண்ணடியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றுள்ளது. 

நிகழ்ச்சி திட்டங்கள்:

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு , செஞ்சி.கே. மஸ்தான், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நடிகை சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் 300 பேருக்கு 5 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 14 பொருட்கள் , வேஷ்டி, சேலை மற்றும் 1000 ரூபாய் பணம் ஆகியவை வழங்கப்பட்டது.

அமைச்சர் சேகர் பாபு:

விழாவை தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, இது 6 வது நிகழ்ச்சியாக இருந்து தள்ளி போய் கொண்டு தற்போது இது 19 வது நிகழ்ச்சியாக நடந்துள்ளது எனவும் முதலமைச்சரின் 70 வது ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சியில் அவர் எல்லாமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான்:

அமைச்சர் என்ற நிலையை எனக்கு உயர்த்திக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி எனவும் இது 2 ஆம் தேதி நடைபெற வேண்டிய நிகழ்வு தள்ளி போய் கொண்டு இன்று நடக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் முதலமைச்சர் கூறியதால் சிறுபான்மையினர் துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கேரளாவுக்கு சென்றிருந்ததால் அன்றைக்கு வர முடியவில்லை என்று கூறியதற்காக  நிகழ்ச்சியை ஒத்தி வைத்து இருந்தார் அமைச்சர் சேகர் பாபு என்று பாராட்டி பேசியுள்ளார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

தொடர்ந்து பேசிய அவர் இன்றைய செய்தி நாளைக்கு வரலாறு என்பது போல நீங்களும் தளபதி ஸ்டாலின் போல வர வேண்டும் எனவும்
எல்லா நிலைகளிலும் ஏழை எளிய மக்களுக்கு உதவுகின்ற அமைச்சராக சேகர் பாபு இருக்கிறார் எனவும் ஆலயங்களை சீரமைக்கும் பணி, மக்கள் பணி என்று அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகை சங்கீதா:

திரைப்படத்தில் ஒளிக்கருவி (கேமரா) முன் நடிக்க சொன்னால் தைரியமாக நடிப்பேன் எதற்கும் பயப்பட மாட்டேன் என்று அனைவரும் சொல்வார்கள் எனவும் ஆனால் அரசியல் மேடையில் பெரிய பெரிய அமைச்சர்கள் , தொண்டர்கள் முன் பேசுவது  கொஞ்சம் பதற்றமாக தான் இருக்கிறது எனவும் நடிகை சங்கீதா கூறியுள்ளார்.

மேலும் அரசியல் என்றாலே புனிதமான வார்த்தை எனவும் இது நமக்கென்று இல்லாமல் மக்களுக்காக செய்வது கடவுளுக்கு சமம் எனவும் கூறிய சங்கீதா தற்போது அரசியல் என்பது கேலி வார்த்தை ஆகி விட்டது எனவும் அந்த மாதிரியான நிலைக்கு காரணம், சிலர் அதை கேலி செய்வது தான் எனவும் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து இவர்கள் செய்யும் சேவையை நிம்மதியாக செய்ய விட்டாலே போதும் எனவும் நான் யாரையும் தனிப்பட்டு குறிப்பிடவில்லை எனவும் கூறியுள்ளார். 

சிலர் ஒருவரை கேலி செய்வதை வைத்து தங்களை அடையாளப் படுத்துகிறார்கள் எனவும் இது மிகவும் கேவலமானது என்றும், 1 முதல் 90 வயது வரை எண்ணுவதற்கே சில நிமிடங்கள் ஆகிறது எனவும் ஆனால் மக்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்காக இவர்கள் 90 நிகழ்ச்சி செய்கிறார்கள் என்றும் பேசியுள்ளார் நடிகை சங்கீதா.

மேலும் ஸ்டாலின் அரசியலில் பெரிய தலைவர் எனவும் அவரது அரசியல் பயணம் குறித்து ஒரு கண்காட்சியில் பார்க்க முடிந்தது எனவும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஒவ்வொரு பதவியாக வந்து தற்போது அவரது உழைப்பால் முதலமைச்சராகியுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய சங்கீதா அவர் வந்த பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஒரு பெண்ணாக  எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும், கவுன்சிலர்களுக்கு 50 சதவீதம் வழங்குவது என பல விஷயங்களை பேசியவர், மேயராக பிரியா இருக்கிறார் எனவும் அவர் காரில் வந்து அப்படி இறங்கும் போது பார்ப்பதற்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது எனவும் பேசியுள்ளார்.

மேலும் பெண்ணாக ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன் எனவும் பெண் குழந்தைகளுக்கு நிறைய தைரியம் கொடுங்கள் எனவும் ஆண் குழந்தைக்கு பெண் பிள்ளையை மதிக்க கற்று கொடுங்கள் என்றும் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் எனவும் கூறிய நடிகை சங்கீதா வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.

இதையும் படிக்க:    லண்டனில் ராகுல்… இந்தியாவை அவதூறு செய்பவர் இந்தியப் பிரதமரே…!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »