Press "Enter" to skip to content

ஆடு மேய்க்க சென்ற பெண் கிணற்றில் விழுந்து பலி…

கடலூர் | பண்ருட்டி ஆர் எஸ் மணி நகர் பகுதியில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீ அங்காளி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் மயான கொள்ளை தீமிதி திருவிழா காப்பு கட்டும் நிகழ்வுடன் துவங்கி மூன்று தினங்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இதில் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. 

இதில் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருந்து ஸ்ரீ அங்காளி அம்மன் வேடம்  அணிந்து கையில் தீச்சட்டி ஏந்திய படியும், சக்தி கரகம் தூக்கியபடியும் பக்தர்கள் குழந்தைகளை சுமந்தபடி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். 

மேலும் படிக்க | தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்… 

இதை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி பம்பை உடுக்கை முழங்க பக்தி பாடல்கள் பாடியும் பெண்கள் கும்மியடித்து  ஆடிய  படி மாசி மாத மயான கொள்ளை தீமிதி திருவிழா மிக கோலாகலமாக நடைபெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் அருள் வந்து ஆடியது அங்கிருந்தவர்களை பக்தி பரவசத்தில் ஆழ்தியது. 

ஸ்ரீ அங்காளி அம்மன் பச்சை நிற பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார் அப்போது அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ அங்காளி அம்மன் விஸ்வரூப சிலைகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 

இந்த திருவிழாவில் பண்ருட்டியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அங்காளி அம்மன் அருளை பெற்றனர். 

மேலும் படிக்க | ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலில் தெப்பத்திருவிழா… 

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »