Press "Enter" to skip to content

இந்தியாவே பெருமைப்படக்கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – வைகோ

உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படும் பெண்கள் தினத்துக்கு ஒரு உலகளாவிய போராட்ட வரலாறும், சோஷலிச பாரம்பரியமும் உண்டு.  இந்தப் பெருமிதத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உலக பெண்கள் தின வாழ்த்துக்களை  உரித்தாக்கிக் கொள்கிறது.

  இந்திய வரலாற்றில் மனுஸ்மிருதி திணிக்கப்பட்டு மனித மாண்புகள் சிதைக்கப்பட்டதுடன் பெண்களும் அடிமையாக்கப்பட்டார்கள். ஒன்றிய பாஜக அரசு அதிகாரத்தில் உள்ள சூழலில் மனுதர்ம கோட்பாட்டை கடைபிடிக்கும் சங்பரிவாரங்களின் பெண்ணடிமைத்தன கருத்தியல் திட்டமிட்டு புகுத்தப்படுகிறது. பெண்கள் மீதான வன்முறை நிகழ்வுகளில் சாதிய, மதவாத கோணங்கள் முன்னுக்கு வருகின்றன. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், குழந்தை திருமணங்கள், குடும்ப வன்முறைகள் அனுதினமும் அதிகரித்து வருகின்றன. 2020ல் 3,71,503 ஆக இருந்த பெண்கள் மீதான வன்முறை – பாலியல் குற்றங்கள், 2021ல் 4,28,278ஆக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மணி நேரமும் பெண்களுக்கு எதிராக 44 குற்றங்கள் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியே நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தப்படாமல் கிடப்பிடல் போடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் பிற்போக்குத்தனமான கொள்கைகளின் காரணமாக பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு 12 சதவிகிதமாக குறைந்துள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. கிராமப்புறங்களில் பெண்கள் அதிமாக பணிபுரியும் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக குறைக்கப்பட்டதுடன் இந்தாண்டு 33 சதவிகிதம் நிதி வெட்டப்பட்டு இத்திட்டமே  கேள்விக் குறியாகியுள்ளது. உயர்கல்விக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் சராசரியாக குறைந்து விட்டதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி பெண்களுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

  அதே நேரத்தில் பாலின முற்போக்கு பார்வை கொண்ட இடதுசாரிகள் தலைமையிலான கேரள அரசு பெண் சமத்துவ சிந்தனையில் நாட்டிற்கே வழிகாட்டியாக திகழ்கிறது. மாதவிடாய் விடுப்பு வழங்கும் சட்டம் உள்ளிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் திராவிட முன்னேற்றக் கழக அரசு உயர்கல்வி பெற பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000/- உதவித் தொகை, இலவச நகரப்பேருந்து சலுகைகள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க| பெண்களை ஆபாச காணொளிக்கள் எடுத்து சிலர் மிரட்டினால் அஞ்ச வேண்டாம் – செளமியா அன்புமணி

  பெண்கள் மீதான வன்முறை தமிழகத்திலும் பல பகுதிகளில் முன்னுக்கு வருகிறது. பரமக்குடி சம்பவம் இதன் கொடூர உதாரணம். பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சந்தேக மரணங்கள், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர் கதையாகி வருகின்றன. அனுமதியின்றி செயல்படும் பாதுகாப்பு இல்லங்களில் பல்வகையான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. பெண்கள் மீதான குரூரமான வன்கொடுமைகள், இணைய தள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இவைகளை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுப்பதே இன்றுள்ள அவல நிலையில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். குடும்பம், சமூகம், ஊடகம், கல்வித் திட்டம், அரசியல் என அனைத்திலும் பாலின சமத்துவத்தை உருவாக்குவதற்கான  முயற்சிகளை, போராட்டங்களை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும். பெண்கள் அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும் இதற்காக நடத்தும் இயக்கங்களுக்கும் முழு ஆதரவு அளிக்கும்.

ஜனநாயக உரிமைகள், வாழ்வாதாரம், பாலின சமத்துவம், வன்முறையற்ற வாழ்க்கை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்காக இக்காலத்தில்  நடந்துள்ள  போராட்டங்கள்,  வேலை நிறுத்தங்கள்  பலவற்றிலும் பெண்களின் வீரம் செறிந்த பங்கேற்பு உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. நாட்டின் முன்னேற்றங்களிலும், வளர்ச்சியிலும் பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருவது பாராட்டுக்குரியது. ஆணாதிக்க, வர்ணாசிரம பிடியிலிருந்து விடுபட்டால் இன்னும் பல்வேறு சாதனைகளை பெண்கள் படைப்பார்கள் என்பது உறுதி 

மேலும் படிக்க| கலை மக்களுக்கானது : பிற்போக்கான கருத்துக்களை பரப்புவதற்கு முயற்சி – திருமா

சாதி, மதம் கடந்து ஆணுக்கு நிகர் பெண் என்ற பாலின சமத்துவத்திற்கான போராட்டங்களில் வலுவாக பங்கேற்க வேண்டுமென தமிழகப்பெண்களை, உலகப்பெண்கள் தினத்தன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »