Press "Enter" to skip to content

பெண்களுக்கு பாதுகாப்பற்ற திமுக ஆட்சி….!!

திமுக சார்பில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், நடிகை ராதிகா சரத்குமார் முன்னிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது.

அன்பு மகளாக:

இது ஒரு திமுக அரசியல் கட்சி விழா.  கட்சி விழாவில் எப்படி கலந்து கொள்வது என்று எனக்கு ஒரு தயக்கம் இருந்தது.  ஆனால் இது மகளிர் விழா என்றும் சொல்லும் போது நான் அதை ஏற்று இங்கு வந்துள்ளேன் என்றால் அது மறைத்த முதலமைச்சர் கலைஞரின் அன்பு மகளாக மட்டுமே எனக் கூறியுள்ளார்.

மறந்து விடுகிறீர்கள்:

ஆண் ஒருவன் படித்தால் அது அவருக்கு மட்டும் தான் நல்லது, ஒரு பெண்ணை படிக்க விட்டால் சமுதாயமே நன்றாக இருக்கும் எனவும் காலையிலிருந்து பல வேலைகளை நானும் தான் செய்கிறேன் நீங்களும் செய்கிறீர்கள் அதே சமயத்தில் நீங்கள் உங்களை பார்த்து கொள்வதில் மறந்து விடுகிறீர்கள் எனவும் பேசியுள்ளார்.

ஆண்களை கெடுப்பதே:

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல அளவுக்கு மீறி ஆண்களை பார்த்துக் கொண்டால் அது நமக்கே விஷமாக மாறிவிடும் எனவும் ஆண்களையும் அவர்களாகவே இருக்க விடுங்கள், அவர்களுக்காக எல்லாவற்றையும் பெண்கள்தான் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

வெற்றிபெற:

நீங்கள் என்ன பாதை அமைக்கிறீர்களோ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை சிறப்பாக செய்ய வேண்டும் எனவும் அதையும் மீறி சவாலாக ஒரு விஷயத்தை எடுத்தால் அதனை தொடர்ந்து அதில் பயணித்து வெற்றி பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் தலைமையில்:

பெண்களுக்காக பாடுபடும் ஒரு அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைந்திருக்கிறது எனவும் அதனை நீங்கள் புரிந்து அவரோடு கைகோர்த்து செல்ல வேண்டும் அறிவுறுத்தியுள்ளார்.

அவரது பாதையில்:

எங்கிருந்தாலும் கலைஞர் அவர்கள்  இதை பார்த்து மிக மகிழ்ச்சியாக இருப்பார் எனவும் அவர் அமைத்துக் கொடுத்த பாதையை இன்று சரியான வழியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார் எனவும் நான் ஒரு மகளாக இதனை இங்கு பதிவு செய்கிறேன் எனவும் நான் அவரை( கலைஞரை) மிகவும்  miss பண்ணுகிறேன் எனவும் பேசியுள்ளார். 

தோசை சுட்டுத்தர..:

இன்றைய காலத்தில் யாராவது தனக்கு தோசை சுட்டு தர மாட்டார்களா என்று ஒவ்வொரு பெண்ணும் ஏங்குகிறார்கள் ஆனால் அது ஒரு நாளும் நடக்காது எனக் கூறிய ராதிகா எனவே பிரச்சனைகளை பார்க்கக்கூடிய கண்கள் பெண்களுக்கு மட்டுமே உள்ளது, அதை ஆண்களுக்கு  தீர்க்க தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  “அடுப்பூதும்  பெண்களுக்கு படிப்பு எதற்கு….” அமைச்சர் சேகர் பாபு!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »