Press "Enter" to skip to content

ஆளுநருக்கு முதலமைச்சர் தக்க எதிர்வினை கொடுப்பார் – திருச்சி சிவா விமர்சனம்!

கணினிமய ரம்மியால் போன உயிர்களுக்கு தமிழ்நாடு ஆளுநரே பதில் அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்களவை உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார், 

இதையும் படிக்க : கணினிமய சூதாட்ட தடை மசோதா…ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் – அமைச்சர் ரகுபதி விளக்கம்!

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கணினிமய ரம்மி தடை சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரிடம் அனுப்பப்பட்டு 142 நாட்கள் ஆகிறது, முதலில் தமிழக அரசிடம் சில விளக்கங்களை கேட்ட தமிழக ஆளுநர்,த்ற்போது  இந்த மசோதாவை திருப்பி அனுப்பி இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

ஆனால், இந்த 142 நாட்களில் தமிழகத்தில் கணினிமய ரம்மி விளையாடி இதுவரை 18 உயிர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், இந்த 18 உயிர்கள் போனதற்கு ஆளுநர் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தொடக்கத்தில் விளக்கம் கேட்ட ஆளுநர், தமிழக அரசு விளக்கங்கள் அளித்தும், 142 நாட்களுக்குப் பிறகு மீண்டும் விளக்கம் கேட்டிருப்பது எங்களுக்கு புரியாத புதிராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏன் இந்த தாமதம், இந்த விளக்கத்தை முன்பே கேட்டிருந்தால், 142 நாட்களில் 18 உயிர்கள் பலியாகி இருக்காது. இதற்கு ஆளுநர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கூறிய அவர், இந்த குற்றச்சாட்டை நான் மட்டும் வைக்கவில்லை, தமிழக மக்களும் வைப்பதாக கூறியுள்ளார்.

எனவே,  தமிழக அரசு உடனடியாக ஆளுநர் கேட்ட விளக்கத்தை அளித்து உடனடியாக, ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். ஆளுநர் இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »