Press "Enter" to skip to content

இந்தியாவிலே கலகத்தை தூண்டுவதுதே பாஜகவின் சித்தாந்தம் -மார்க்சிஸ்ட் கம்யூ…

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனங்கல் மாளிகை அருகே திரிபுராவில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு ஆட்சி பிடித்துள்ள பாஜகவின் வன்முறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாஜகவிற்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் கோஷமிட்டனர்.

மேலும் படிக்க | ஆளுநர் பேசக்கூடாது என்றால் ஏன் மசோதாவை அனுப்பனும் ? கேள்விகள் எழுப்பிய குஷ்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர் சந்திப்பு

திரிபுராவில் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை அடுத்து ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக இதுவரை 1200க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறையை ஏற்படுத்தி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நிறைய வீடுகள் இடிக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறையை பாஜக தொடர்ச்சியாக செய்து வருகிறது. பிரச்சாரத்தின் போதே பல்வேறு பிரச்சனைகளுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமலும் ஆட்சிக்கு வந்த பின் இது போன்ற பிரச்சனைகள் குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்ட மனுவை கொண்டு செல்ல விடாமல் தடுப்பதும் ஜனநாயகமற்ற செயலாகும்.

அரசின் வரவு செலவுத் திட்டம் தாக்கல்

ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டம் தாக்கல் வழக்கம் போல பாஜகவின் வரவு செலவுத் திட்டம் போலவும் பெரு முதலாளிகளின் ஆதரவாகவே வரவு செலவுத் திட்டம் தாக்கல் அமைந்தது. தற்போதைய காலத்தில் வேலையின்மை, பணவீக்கம், விலைவாசி உயர்வு மூன்றும் தான் பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுவது மட்டுமல்லாமல் இதுபற்றி நிதி அமைச்சரின் பேச்சு ஒன்று கூட ஒத்துப் போகவில்லை எனவும்,தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு விட்டது என்றும் தமிழகத்தில் விவசாயம், கல்வி, மருத்துவம் கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என கூறினார்.

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவில் கோயில்கள் தாக்கப்படுவதால்…நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டு பிரதமர் உறுதி – பிரதமர் பேட்டி!

இந்தியாவிலே கலகத்தை தூண்டுவதுதே பாஜகவின் சித்தாந்தம்

உத்திரப்பிரதேசம் பாஜகவின் அதிகார செய்தி தொடர்பு உள்ளது. தமிழகத்தில் இந்தி பேசியதற்காக 15 நபர்களை தூக்கிலிடப்பட்ட தவறான காணொளி பதிவினை பாஜக சித்தரித்தது. தமிழ்நாட்டில் உள்ள பிற மாநிலத்தவர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்களை கொல்ல முயற்சிக்கிறார்கள் என்ற மிக மோசமாக தமிழ்நாட்டை சிறுமைப்படுத்தும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. பாஜகவில் உள்ள நபர் இறந்து விட்டால் கூட தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலே கலகத்தை தூண்டுவதுதே பாஜகவின் சித்தாந்தம் என்றும் அதனை தமிழ்நாட்டில் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள் என தெரிவித்தார்

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »