Press "Enter" to skip to content

கழிவறைகள் தனியார் உதவியுடன் முறையாக பராமரிக்கப்படும்….!!!

கால்வாய்களில் கொசு உற்பத்தியை தடுக்க மாநகராட்சி சார்பாக கால்வாய்களில் மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் மாநகராட்சி சார்பில் கட்டப்படும் கழிவறைகள் தனியார் உதவியுடன் முறையாக பராமரிக்கப்படும் எனவும் சென்னை மாநகர மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

போர்க்கால அடிப்படையில்:

சென்னை மாநகராட்சி முழுவதும் கடந்த ஆண்டு போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றதன் காரணமாக பல்வேறு இடங்களில்  பழுதடைந்துள்ள சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் சாலைகளை சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டு சாலைப் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

சிங்காரச் சென்னை 2.O:

சிங்காரச் சென்னை 2.O திட்டத்தின் கீழ் சென்னை, அண்ணாநகர் மற்றும் வள்ளுவர்கோட்டம் பகுதிகளில் நடைப்பெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மேயர் உடன் திமுக கவுன்சிலர்கள் சிற்றரசு, மெட்டில்டா கோவிந்தராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சாலைகள் ஆய்வுகள்:

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகரம் முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக சேதமடைந்த சாலைகள் முதலமைச்சர் உத்தரவின் பேரில் சீரமைக்கப்பட்டு வருகின்றன எனவும் இந்த சாலைகள் முறையாக போடப்படுகிறதா, வெப்பநிலை, பிட்மென், சாலையின் தடிமன் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது எனவும் கூறியுள்ளார்.

சீரமைப்பு பணிகள்:

சென்னை மாநகராட்சி மூலமாக 1,157 சாலைகள் ரூ.124 கோடி மதிப்பீட்டில் போடப்பட உள்ளன எனவும் 632 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது 80 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் சிங்கார சென்னை திட்டம் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் பி.ஆர்.

ஆர் கீழ் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 சாலைகள் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது எனவும் இதில் 3 பணிகள் முடிவு பெற்றுள்ளன எனவும் கூறியுள்ளார்.  மேலும் 7 பணிகள் நடைப்பெற்று வருகின்றன எனவும் 18 பணிகள் நடைபெற உள்ளன எனவும் உட்புறச்சாலைகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

கழிப்பிடங்கள்:

சென்னை, மாநகராட்சி சார்பாக கட்டப்படும் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது எனவும் ஏதேனும் சீரமைப்பு பணிகள் காரணமாக கழிப்பிடங்கள் பூட்டி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்த அவர் மண்டலம் 5,6 மற்றும் 9 களில் கழிப்பிடங்களை சீரமைக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் அதேபோல் ஒவ்வொரு பகுதிகளிலும் தனியாரிடம் இணைந்து சீரமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.  மேலும் கழிப்பிடங்கள் திறந்து வைக்கும் நேரம் குறித்து தனியாருக்கு முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:    இட்லிக்கும் சட்னிக்கும் வரி என்று தான் மோடி அரசு….!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »