Press "Enter" to skip to content

நோயில்லா கண்ணகிநகரை உருவாக்க மருத்துவ முகாம்

எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு கூடுதல் காவல் துறை பாதுகாப்பு கூறும் மனு மீது சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிசீலனை செய்து புரிய முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

சிவகங்கையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு கூடுதல் பாதுகாத்துக் கோரி உயர்நீதிநீதி மன்றக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. சிவகங்கையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடை பெற உள்ளது.

மேலும் படிக்க | கடந்த காலத்திற்கு சென்று நிகழ்காலத்துக்கு வந்திருக்கேன் – வைரமுத்து

 இந்நிலையில் இந்த பொதுக்கூட்டத்திற்கு கூடுதல் காவல் துறை பாதுகாப்பு வழங்க கோரி சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம் எல்ஏ  சார்பில்  உயர்நீதிநீதி மன்றக் கிளை பதிவாளர் முன் ஆஜராகி இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.இதைத்தொடர்ந்து நீதிபதி ஜி. இளங்கோவன் காணொளி கான்பரன்சில்  விசாரித்தார். 

 

விளம்பர ஒட்டிகள்  கிழிப்பு

அப்போது மனுதாரர் தரப்பில் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கள் தரப்பில் ஒட்டப்பட்ட விளம்பர ஒட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளதாகவும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் இபிஎஸ் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்றார். 

அரசுத் தரப்பில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சில இடங்களில் விளம்பர ஒட்டிகளை கிழித்த்துள்ளனர். இது தொடர்பாக இதுவரையே யாரும் புகார் அளிக்கவில்லை. ஆனாலும் காவல் துறையினர் தரப்பில் தேவையான அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என கூறப்பட்டது

இதை அடுத்து நீதிபதி கூடுதல் காவல் துறை பாதுகாப்புக் கோரும் மனுவை சிவகங்கை காவல் துறையினர் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »