Press "Enter" to skip to content

தமிழ்நாட்டு மீனவர்கள் 16 பேர் கைது – ராமதாஸ் கண்டனம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள மூன்றாயிரத்து 185 தேர்வு மையங்களில், சுமார் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 40 மையங்களில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், 23 ஆயிரத்து 747 தனித்தேர்வர்களும், 6 மாற்றுத் திறனாளிகளும், 90 சிறைக்கைதிகளும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 14 ஆம் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் மூவாயிரத்து 224 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதவுள்ளனர். இவர்களில் ஐயாயிரத்து 338 தனித் தேர்வர்களும் 4 மூன்றாம் பாலினத்தவர்களும் 125 சிறைக்கைதிகளும் அடங்குவார்கள்.

இதையும் படிக்க : சென்னை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) கட்டம் 2-ல்…2 நிமிட இடைவேளையில் ஒரு தொடர் வண்டிஇயக்கம்…மெட்ரோ நிர்வாகம் முடிவு!

இதனிடையே, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வு அறைக்குள் கைப்பேசி உள்ளிட்ட மின்சாதனங்கள் எடுத்துச் செல்லக் கூடாது, விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற மையினால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும், விடைத்தாளில் சிறப்புக் குறியீடு , தேர்வு எண் , பெயர் ஆகியவற்றைக் குறிக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேர்வு நடைபெறும் காலங்களில் பொதுத் தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை 9498383031 மற்றும் 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »