Press "Enter" to skip to content

ஆஸ்காரில் ஸ்டாண்டிங் ஓவேஷன் பெற்ற ‘நாட்டு நாட்டு’…

தொலைபேசியில் பேசும்போது கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக ராகுல் கூறியுள்ளார்.  மேலும், இந்தியாவின் அனைத்து நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்  ஊடகங்கள் மற்றும் நீதிமன்றங்களையும் அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆபத்தில் ஜனநாயகம்:

வெளிநாட்டில் இருந்து கொண்டு மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார் ராகுல் காந்தி. லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ மாணவர்களிடம் ராகுல் பேசுகையில், இந்திய அரசை விமர்சித்து பேசியுள்ளதுடன் இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

கேம்பிரிட்ஜில் ராகுல்:

கேம்பிரிட்ஜில் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்ட ராகுல் காந்தி மாணவர்களுடன் உரையாடுகையில், ”இந்தியாவில் ஊடகம் மற்றும் நீதித்துறை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.  எனது தொலைபேசியில் பெகாசஸ் மென்பொருள் இருந்தது.  அதன் மூலம் நான் உளவு பார்க்கப்பட்டேன்.  உளவுத்துறை அதிகாரிகள் எனக்கு அழைத்து பேசும் போது கவனமாக பேசுங்கள்.  உங்கள் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படுகிறது எனக் கூறினர்.” எனக் கூறியுள்ளார்.

உளவு பார்க்கப்பட்டேன்:

மேலும்,”எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன.  என் மீது பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இதுபோன்ற வழக்குகளில் எந்த அர்த்தமும் இல்லை.  நாங்கள் எங்களை தற்காத்துக் கொள்ள முயற்சிக்கிறோம். 

 அதற்காக நான் உளவு பார்க்கப்பட்டேன்.” எனவும் பேசியுள்ளார்.
 
உடனடி கவனம் தேவை:

உலகில் ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்த புதிய சிந்தனையின் அவசியம் குறித்தும் பேசியுள்ளார் ராகுல் காந்தி.  ஜனநாயக விழுமியங்களை யார் மீதும் திணிக்கக் கூடாது எனக் கூறிய அவர் இந்தியா, அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளில் கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவையும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.  

மேலும் இந்த மாற்றம் பெரிய அளவிலான சமத்துவமின்மை மற்றும் மனக்கசப்பை அம்பலப்படுத்தியுள்ளது எனவும் இதற்கு உடனடி கவனம் மற்றும் உரையாடல் தேவை எனவும் தெரிவித்த அவர் ஜனநாயக விழுமியங்களில் நங்கூரமிடப்படாத உலகம் கட்டியெழுப்பப்படுவதை நாம் காண முடியாது எனக் கூறியுள்ளார்.  

இதற்கு முன்னர்:

அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்திய அரசுக்கு எதிராக அறிக்கை அளித்துள்ளன எனக் கூறியுள்ளார் ராகுல் காந்தி.  2022 லும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவரது உரையின் போது, ​​ராகுல் இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிட்ட்டு பேசியிருந்தார்.  அப்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக வரலாறு படைத்த நாகலாந்து…!!!  

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »