Press "Enter" to skip to content

ஈ.பி.எஸ். உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு…தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தும், திரும்பப்பெற பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அவதூராக பேசி, முகநூலில் நேரலையில் பதிவு செய்த நபர் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்ததையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி, அவரது நேர்முக உதவியாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : முத்திரை பதிக்கும் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை…!

இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர்,  வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தும், வழக்கை திரும்பப்பெற பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில், நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்று, வழக்கை திரும்பப்பெற பெற வலியுறுத்தியும், அரசைக் கண்டித்தும் முழுக்கங்களை எழுப்பினர்.

இதேபோன்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெ பேரவை சார்பில் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வடசென்னை திருவொற்றியூரில், நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பம் தலைமையில் அ.தி.மு.க.வினர் பங்கேற்று பொய் வழக்கு தொடர்ந்த அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.   

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »