Press "Enter" to skip to content

ராகுல் காந்தி பேசியது ஜனநாயக விரோதமல்ல…மோடியின் ஜனநாயகத்தை தோலுரித்து காட்டுகிற விஷயம்!

திமுக அரசின் மக்கள் விரோதபோக்கு இனியும் தொடர்ந்தால் மனித வெடிகுண்டாக மாறுவோம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து முகநூலில் அவதூறு காணொளி வெளியிட்ட விவகாரத்தில் அ.ம.மு.க., பிரமுகர் ராஜேஸ்வரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன் ஒருபகுதியாக, மதுரை பழங்காநத்தத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு பதிவு செய்யும் சர்வாதிகார போக்கு இனியும் தொடரும் பட்சத்தில் மனித வெடிகுண்டாக மாறுவோம் என ஆவேசமாக தெரிவித்தார். 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

உதகை மாவட்டம் கோத்தகிரியில்  உள்ள மார்க்கெட் திடலில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது.

இதையும் படிக்க : ஈ.பி.எஸ். உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு…தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த முக்குராந்தல் பகுதியில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறை மற்றும் திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சென்னை அடுத்த மாதவரத்தில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மக்கள் நலனுக்கு எதிராக சர்வாதிகார போக்குடன் செயல்படும் திமுக அரசு விரைவில் தூக்கி எரியப்படும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »