Press "Enter" to skip to content

திருடப்பட்டஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)-கை ‘48’ மணி நேரத்தில் கண்டுபிடித்த சென்னை போக்குவரத்து காவல் துறையினர்!

கோவை | நேற்றிரவு டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கபட்டவரில் ஒருவர் வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சூரிய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின் காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.

மேலும் படிக்க | பணத்திற்கு ஆசைப்பட்டு மூதாட்டியே கொலை செய்த அக்கா தம்பி !!!!

இந்நிலையில் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மேற்கு வங்க புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.  அப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு குறித்து அரசு மற்றும் காவல் துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். 

நேற்று நடந்த சம்பவத்தில் நான்கு பெயர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், மேலும் ஏதேனும்  புகார்கள் இருந்தாலும் உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறும் அதற்கு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். 

மேலும் படிக்க | பூண்டி மாதா சிலையின் கண்ணாடி கூண்டு உடைக்கப்பட்டதால் பரபரப்பு… 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம்  கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, இந்த வழக்கில் பிரகாஷ் என்பவர் இந்து முன்னணி அமைப்பில் இருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது செல்போனில் அதற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளன. மேலும் இதில் சூர்யா என்கின்ற முருகன் ஏற்கனவே இந்து முன்னணியில் இருந்ததாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து தொடர் புலன் விசாரணை நடைபெற்ற வருகிறது. மேலும் ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காவல்துறையினரே தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது அலைபேசி எண்கள் அச்சிட்ட அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

மேலும் படிக்க | 7 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி விமான நிலையத்தில் வைத்து கைது…

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »